தோட்டத்தில், வீட்டில் எலி தொல்லையா? எலிகளை ஓட ஓட விரட்ட இதை செய்து வைத்தாலே போதும்! முற்றிலும் புதுமையான முறை.

rat-ulunthu
- Advertisement -

வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் பெரும் போராட்டமாக இருக்கும். என்னதான் செய்து அதை விரட்டுவது? என்று நமக்கே ஒன்றும் புரியாது. ரேட் கில்லர்ஸ் மற்றும் எலிப்பொறி வைத்து பிடிக்க நினைத்தாலும் இப்போது உள்ள எலிகள் எல்லாம் சற்று உஷாராகவே இருக்கிறது, பிடிப்பட மாட்டேன் என்கிறது. இப்படிப்பட்ட எலி தொல்லைகளில் இருந்து ரொம்ப எளிதாக விடுதலை பெற இந்த சில முயற்சிகளை செய்து பார்த்தால் பெரும்பலன் அளிக்கும். அத்தகைய எளிய வீட்டு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எலிகள் வீட்டில் மட்டும் அல்லாமல் தோட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு பெரிய தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகம் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. கஷ்டப்பட்டு வளர்க்கும் செடி, கொடிகளை அழித்து நாசமாக்கி கொண்டிருக்கும் இந்த எலிகளை பிடிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான சில புதுமையான முறைகளை தான் இப்பதிவில் காண இருக்கிறோம்.

- Advertisement -

முதலாவதாக ஒரு கைப்பிடி அளவிற்கு வடித்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனுடன் அரை கைப்பிடி அளவிற்கு வறுத்த வேர்க்கடலை பவுடரை சேர்த்து கலந்து வைத்து, ரெண்டு டீஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கருவாடு இருந்தால் அதை பொடி பொடியாக வெட்டி பவுடராக்கி அதையும் சேர்க்கலாம். இந்த கலவையை உருண்டை பிடித்து எலி வரும் இடங்களில் எல்லாம் வைத்து விட்டால் போதும், எலி சாப்பிட்டு எங்காவது சென்று செத்து மடிந்து விடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா எனப்படும் ஆப்ப சோடாவையும் சேர்த்து எலி வரும் இடங்களில் எல்லாம் ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்து விட்டால் போதும், எலி தின்று மடிந்து விடும். ஆப்ப சோடாவிற்கு பதிலாக ஃபிளாஸ்ட் ஆப் பாரிஸ் எனப்படும் பொம்மை செய்யக்கூடிய பவுடரையும் சேர்க்கலாம், நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

ஊமத்தை காய் கிடைத்தால் ஐந்து காயை கால் லிட்டர் தண்ணீரில் துண்டுகளாக போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு கைப்பிடி நிறைய வெள்ளை கொண்டை கடலையை போட்டு ஊற வையுங்கள். ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு அந்த கொண்டைக்கடலைகளை எடுத்து எலி வரும் இடங்களில் எல்லாம் போட்டு விடுங்கள். எலி வரக்கூடிய பொந்துகளிலும் போட்டு விடுங்கள். அவ்வளவுதான், எலி அதனை சாப்பிட்டுவிட்டு விஷத்தன்மை உள்ளதால் செத்து மடிந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
வெறும் 10 ரூபாய் செலவில் நம் வீட்டிலேயே வாஷிங் மெஷினில் துணி துவைக்க லிக்விட் தயார் செய்துவிடலாம். இந்த ஐடியா மட்டும் தெரிந்தால் போதும்.

ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்த மாவுடன், ஒரு டேபிள்ஸ்பூன் கருப்பு எள்ளு பொடி சேர்த்து இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எருக்கம் பால் கலந்து கை படாமல் உருண்டை பிடித்து எலி வரும் இடங்களில் வையுங்கள். விஷத்தன்மை உள்ளதால் இதை சாப்பிட்டு எலி மடிந்து விடும். கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் சிமெண்ட் உடன் ஒரு கைப்பிடி அளவிற்கு ஒன்றிரண்டாக பொடித்த வறுத்த வேர்க்கடலைகளை சேர்த்து கலந்து எலி வரும் இடங்களில் வைத்தாலும் எலி மடியும். சிமெண்டுடன் வேர்க்கடலைக்கு பதிலாக கருவாடு துண்டுகளையும் போட்டு கலந்து வைக்கலாம்.

- Advertisement -