எலி தொல்லை இனி இல்லை. ரைமிங்கா சொல்லணும்றதுக்காக சொல்லலங்க, உண்மையாவே இந்த டிப்ஸ் பாலோ பண்ணிங்கன்னா உங்க வீட்டு பக்கம் எலி வரவே வராது.

- Advertisement -

எலி, இது பார்ப்பதற்கு மிக சிறிய உயிரினமாக தான் இருக்கும். இது என்ன செய்துவிடும் என்று நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளவே கூடாது. எலியின் எச்சில், முடி எல்லாமே ஆபத்தை விளைவிக்க கூடியது தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் இந்த எலி வராமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு முதலில் நாம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாப்பிட உணவு துகள்களை ஆங்காங்கே போட்டு வைப்பதும், வீட்டை சுத்தி அழுக்கு நீர் தேங்கி இருப்பதும், வீட்டில் எப்போதும் ஒரு வித வாடை வீசுவது இது போன்றவைகளை முதலில் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதை செய்தாலே பெரும்பாலும் எலி வராது. மழைக்காலங்களில் எலி கதகதப்பான இடத்தை நோக்கி செல்லும் இது போன்ற சமயங்களில் எலி நிச்சயம் நம் வீட்டில் தஞ்சமடையும். அப்போது அவைகளை விரட்டி அடிப்பது என்பது சற்று கடினமான காரியமாக தான் இருக்கும். அப்படி பட்ட சூழ்நிலையை சமாளிக்க தான் இங்கே சில வழிமுறைகளை உங்களுக்காக பதிவிட்டு உள்ளோம். இதை பயன்படுத்தி உங்கள் வீட்டினை எலி தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு வெங்காயத்தை எடுத்து தோலுரித்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வட்டமாக நறுக்கி உங்கள் வீடுகளில் எலி வரும் வழிகளில் எல்லாம் இதை வைத்து விடுங்கள் இந்த வாடைக்கு எலி வராது. அடுத்து நாலைந்து கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதையும் உங்கள் வீட்டில் எலி நடமாடும் இடங்களில் வைத்து விடுங்கள் இந்த கிராம்பு வாடைக்கும் எலி வராது.

- Advertisement -

அடுத்து இது கொஞ்சம் வித்தியாசமான டிப்ஸ் தான் பாராசிட்டமில் மாத்திரை ஒன்று தூள் செய்து கொள்ளுங்கள். இத்துடன் கோதுமை மாவு ஒரு ஸ்பூன் இரண்டையும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு உருண்டைகளாக பிடித்து இதையும் ஆங்காங்கே வைத்து விட்டால் போதும் எலி இனி வராது. ஆனால் இதை வைக்கும் போது வீட்டில் குழந்தைகள் தொடும் இடங்களாக இருந்தால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

தனி மிளகாய் தூள் இருந்தால் அதையும் தூவி விடலாம். அதே போல் பூண்டு எடுத்து நன்றாக நசுக்கி அதையும் ஆங்காங்கே வைத்து விடலாம். இது மட்டும் இன்றி நாப்தலின்பால், பேபி பவுடர், இவைகள் கூட எலி வரும் இடங்களில் வைத்து விட்டால் இந்த வாடைகளுக்கு எலி வராது.

- Advertisement -

அடுத்து பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன், வேர்க்கடலை பவுடர் ஒரு ஸ்பூன் இரண்டையும் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவு உருண்டைகளாக பிடித்து வைத்து விடுங்கள். இதை உண்ட பிறகு எலி நீங்கள் இருக்கும் பக்கம் தலையைக் காட்டவே காட்டாது.

இதையும் படிக்கலாமே: கிச்சன் சிங்க் அடிக்கடி அடைத்துக்கொள்கிறதா? இப்படி செஞ்சி பாருங்க அடைப்பு நீங்குவதோடு பல நாட்களுக்கு அடைப்பு ஏற்படாது

இந்த டிப்ஸ் பாலோ பண்ணீங்கன்னா உங்கள கண்டு உங்க வீட்ல இருக்கவங்க மட்டும் இல்ல, இந்த எலியும் பயந்து நடுங்கும் பாருங்க. இந்த முறைகளை நீங்கள் முயற்சி செய்து எலி தொல்லை இல்லாமல் இருங்கள்.

- Advertisement -