அடுப்புக்கரி இல்லாமல் சாம்பிராணி தூபம் போடுவது எப்படி?

sambarani
- Advertisement -

நவீனமயமாக மாறிவிட்ட இந்த உலகத்தில் சாமி கும்பிடும்போது நாம் செய்யக்கூடிய சில பழக்க வழக்கங்களையும் மாற்றிவிட்டோம். அந்த காலத்தில் சாம்பிராணி தூபம் போடாமல் வீட்டில் பூஜையே இருக்காது. இன்று கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி ஏற்றி வைக்கின்றோம். ஆனால் அந்த பால் சாம்பிராணி பொடியை வாங்கி தூபம் போடுவதில் இருக்கும் மனம் வேறு எதிலும் இல்லை. அதில் இருக்கும் இறை சக்தி, மன நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது. அது மட்டும் இல்லாமல் அது ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது.

அடுப்பு கரி வாங்கி அதில் நெருப்பு மூட்டி தனல் வந்த பிறகு அதில் சாவராணி தூபம் போட உங்களுக்கு நேரமில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு பதில் வேறு எப்படி தனல் மூட்டி சாம்பிராணி தூபம் போடலாம் என்பதை பற்றிய பயனுள்ள ஒரு சில வீட்டு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

அடுப்புக்கரி இல்லாமல் சாம்பிராணி தூபம் போடும் முறை

இதற்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் தேங்காய் நார். தேங்காய் வாங்கி அதன் மேலே இருக்கும் அந்த குடுமி பகுதி என்று சொல்லுவோம் அல்லவா அதை பிரித்து குப்பையில் போடாதீங்க. ஒரு கவரில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கொட்டாங்குச்சியில் கூட அந்த தேங்காய் நாரை போட்டு ஒரு கட்டி கற்பூரம் போட்டு ஏற்றிவிட்டால் போதும் ஒரே நிமிடத்தில் அதில் தீ பற்றி கொள்ளும். நன்றாக நெருப்பு பிடிக்கும்.

நெருப்பு பிடித்து, அனைத்து பின்பு லேசாக அந்த எரிந்த தேங்காய் நாரை ஒரு விசிறியால் வீசி விடுங்கள். அப்போது அதில் நல்ல நெருப்பு பிடித்தது உங்களுக்கு தெரியும். அதில் சாம்பிராணி தூளை போட்டு புகையை வரவைத்து வீடு முழுவதும் காண்பியுங்கள்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் இன்னொரு வழியும் இருக்கிறது. தூப காலில் ஒரு கட்டி கற்பூரம் வைத்து கொளுத்தி விடுங்கள். அதில் உடைத்த இரண்டு மூன்று கொட்டாங்குச்சி துண்டுகளை போட்டு பற்ற வையுங்கள். பத்து நிமிடத்திற்குள் அந்த கொட்டாங்குச்சியில் நல்ல நெருப்பு பற்றி இருக்கும். அதில் பால் சாம்பிராணி பொடி போட்டு இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம்.

எப்போதுமே நெருப்பு எரியும்போது சாம்பிராணி துளை அதில் தூவக்கூடாது. நெருப்பு அந்த பொருளில் நன்றாக பிடித்து, தனல் மூண்டு இருக்கும் சமயத்தில் தூபம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் நல்ல புகை வரும். இது இரண்டுமே சுலபமான முறை தான். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குறைந்த நேரத்தில் சாம்பிராணி தூபம் போடுவதற்கு இந்த இரண்டு குறிப்புகளும் பயனுள்ளபடி அமையும்.

- Advertisement -

இப்படி சாம்பிராணி போடும்போது இதில் லேசாக ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு பாருங்கள். இதிலிருந்து வெளிவரும் வாசம் அப்படியே வீடு முழுவதும் நிரம்பி தெய்வ கடாட்சத்தை நிலைக்கச் செய்யும். உங்களுடைய வீட்டில் ரொம்பவும் கொசு, சின்ன சின்ன ஈக்கள் பூச்சிகள் எல்லாம் கூட இந்த சாம்பிராணி புகைக்கு நிக்காது.

இதையும் படிக்கலாமே: படிப்பில் சிறந்து விளங்க விநாயகர் வழிபாடு

வெளியே சென்று விடும். சில பேர் வீடுகளில் இந்த மழைக்காலத்தில் நிறைய கொசு இருக்கும் அப்போது இந்த சாம்பிராணி தூபத்தோடு நாம் கொஞ்சம் காய்ந்த வேப்பிலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய் கிழக்குகைகளிலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பிராணி தூபம் போடும் வழக்கம் இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைக்கும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -