செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் லட்சுமி குபேர பூஜையை, நம் இல்லத்தில் மிகவும் எளிமையாக இப்படியும் வழிபாடு செய்யலாம்.

kubera lakshmi
- Advertisement -

செல்வம் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது மகாலட்சுமி தாயார் ஆனால் சமீப காலமாக செல்வது என்று கூறிய உடனே ஞாபகத்திற்கு வருவது குபேரர் தான் இந்த குபேர பூஜையை பலரும் பல வழிகளிலும் முறைகளிலும் செய்து வருகிறார்கள். ஆனால் செல்வத்துக்கெல்லாம் அதிபதி ஆனது மகாலட்சுமி தாயார் தான் குபேரர் அந்த செல்வங்களுக்கு தலைவனாகவும் செல்வத்தை பிறருக்கு அருளும் வரத்தையும் தந்தவர் மகாலட்சுமி தாயார் தான் எனவே இந்த பூஜை குபேர பூஜை என்பதை விட மகாலட்சுமி குபேர பூஜை என்று கூறுவதை சிறந்தது இந்த பூஜையை நம் இல்லங்களில் மிக எளிமையாக எப்படி செய்வது என்பதை பற்றிய பதிவுதான் இது.

முதலில் இந்த பூஜை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் இந்த பூஜை ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அம்மாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும் ஏனென்றால் இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார் எனவே நாமும் அதே நேரத்திலே அவர்களை வணங்க வேண்டும் என்பதுதான் இந்த நேரத்திற்கான காரணம்.

- Advertisement -

இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் மகாலட்சுமி தாயார் படம் அல்லது குபேர படம். குபேரர் விக்ரகம் இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும். நீங்கள் படத்திற்கு நேரில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது. படம், எந்திரம் வைத்து இருக்கும் இடத்திற்கு இடம் அல்லது வடமாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

குபேரர் எந்திரம் இருந்தால் அதை வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை என்றால் குபேர எந்திரம் நீங்கள் ஒரு மனை பலகையில் வரைந்து கொள்ளுங்கள் தரையில் வரைய வேண்டாம். குபேரர் எந்திரத்தில் உள்ள எண்களின் ஓரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நாணயத்தை வைக்க வேண்டும் அந்த நாணயம் எண்களை மறைக்காதவாறு வைத்துக் கொள்ளுங்கள். கட்டத்தின் ஓரத்தில் ஸ்ரீ என்று எழுதி வைக்கவும்.

- Advertisement -

அடுத்து இரண்டு குத்து விளக்கு, அல்லது இரண்டு அகல் விளக்கு அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். லக்ஷ்மி தாயாரின் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மலர்களை அலங்காரம் செய்து விடுங்கள். துளசியும் தாமரை மலரும் அதில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக வாசனை நிறைந்த குங்குமம், ஒரே மாதிரியான 9 நாணயங்கள். ஒன்பது ஒரு ரூபாய் நாணயமாக கூட இருக்கலாம். அதற்கு மேலும் நாணயங்கள் வைப்பதும் வெள்ளி தங்கம் போன்றவை வைப்பதும் உங்களின் விருப்பம் ஆனால் ஒன்பது நாணயங்கள் மட்டும்தான் இந்த பூஜைக்கு தேவை.

- Advertisement -

நெய்வேத்தியமாக சிகப்பு அவல் அதில் தேங்காய் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வைத்தாலே போதும். பழங்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் தேங்காய் இவ்வளவு மட்டுமே பிரதானம். பூஜையை தொடங்க முதலில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து விட்டு ஆரம்பிக்க வேண்டும் இல்லை உங்கள் வீட்டில் வேறு ஏதாவது விநாயகர் விக்ரங்கள் ஏதாவது இருந்தால் அதையும் பூஜையில் வைத்துக் கொள்ளலாம். விநாயகரை பூஜித்த பிறகு உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு உங்களின் கஷ்டங்கள் யாவும் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பூஜையை தொடங்க வேண்டும்.

குபேர எந்திரத்தின் முன்பு அமர்ந்து தாமரை பூவின் 9 இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இதழிலும் ஒரு நாணயத்தை வைத்து அதில் கொஞ்சம் குங்குமம் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.ஒவ்வொரு முறை இந்த நாணயத்தை வைக்கும் போதும் இந்த மந்திரத்தை மட்டும் ஜெபித்தாலே போதும்.

ஓம் குபேராய நமக
ஓம் தந்தாய நமக

இந்த ஒரு நாமத்தை மட்டும் நீங்கள் அந்த ஒன்பது நாணயத்தை வைக்கும் போதும் ஒன்பது முறை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பின்பு அதில் உள்ள இந்த காசுகளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவராக இருந்தால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்து கொள்ளலாம் இந்த பணத்தை அடுத்தடுத்த முறை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியாக எடுத்து வைத்து விடுங்கள் மற்ற பணத்துடன் கலந்து செலவழித்து விட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: நகை விற்கும் விலைக்கு தங்க நகை சேர்க்கைக்கு நாம் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்ன? வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் ஸ்வர்ணம் அதிகம் சேரும்!

இந்த லட்சுமி குபேர பூஜை எளிமையான முறையில் உங்கள் இல்லங்களில் வணங்கி இனி வரும் நாட்களில் நீங்கள் நல்ல செல்வ செழிப்போடு வாழ லக்ஷ்மி தேவன் ஆசீர்வாதமும் குபேரரின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -