ரெண்டே நிமிஷத்துல இட்லி, தோசைக்கு இவ்வளவு சுவையா நல்ல காரசாரமா ஒரு சட்னியை ரெடி பண்ணவே முடியாது. மிஸ் பண்ணம்மா ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -

இட்லி, தோசைக்கு எப்போதும் அரைக்கும் சட்னி வகைகளில் கொஞ்சம் வித்தியாசமான இந்த ரோசாப்பூ சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ரோசாப்பூ சட்னி என்றவுடன் ரோஜா பூவை சேர்த்து அரைக்கும் சட்னி என்று நினைத்து விட வேண்டாம். இந்த சட்னிக்கு பெயர் தான் ரோசாப்பூ சட்னியே தவிர சட்னி அரைக்கும் விதமே வேறு. வாங்க அதை எப்படி அரைப்பது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20, பூண்டு பல் – 20, காய்ந்த மிளகாய் – 5, புளி -1 நெல்லிக்காய் அளவு, உப்பு -1/4 டீஸ்பூன், சர்க்கரை -1/4 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1டீஸ்பூன், கறிவேப்பிலை -1கொத்து, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி தாளிக்க அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் காய்ந்த மிளகாயும், புளியும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி கொதிக்க விடுங்கள். ஒரு நிமிடம் இது கொதித்தாலே போதும் காய்ந்த மிளகாய் புளித் தண்ணீரில் நன்றாக வெந்து விடும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் , பூண்டு, உப்பு, சர்க்கரை எல்லாம் சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த மிளகாய், புளியை இதில் சேர்த்து அதில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மீண்டும் அடுப்பில் அதே பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு போட்டு பொரிய விட்டு உளுத்தம் பருப்பையும் சேர்த்து அதுவும் சிவந்து வந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து விடுங்கள். அதன் பிறகு நாம் அரைத்து வைத்து சட்னியை இதில் சேர்த்து ஒரு நிமிடம் வரை கை விடாமல் கலந்து விட்டால் வெங்காயம், பூண்டின் பச்சை வாடை எல்லாம் போய் விடும். சட்னியில் இருக்கும் எண்ணெய் எல்லாம் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுப்பை அணைத்து விட்டு இந்த சட்னியை சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறி பாருங்கள். சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். ரெண்டே நிமிடத்தில் மிகவும் குறைவான பொருட்களை வைத்து சூப்பரான அதே நேரத்தில் நல்ல காரசாரமான சுவையான ஒரு சட்னியை இவ்வளவு சுலபமாக தயார் செய்து விட்டோம்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை சேர்த்து காலிஃப்ளவர் சில்லி செஞ்சு பாருங்களேன்! எவ்வளவு நேரம் ஆனாலும் மொறுமொறுப்பாகவே இருக்கும். கடையில் வாங்கிய சில்லி கூட இவ்வளவு நேரம் மொறுமொறுப்பாக இருக்காது.

ஒரு முறை இந்த ரோஜா பூ சட்னியை அரைத்து சாப்பிட்டு பாருங்கள். இனி இட்லி தோசை செய்யும் போதெல்லாம் இந்த சட்னியை தான் நீங்களும் செய்வீங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் சூப்பரா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -