எலுமிச்சை தீபம் ஏற்றும் முறையும் பலன்கள்

amman elumichai
- Advertisement -

பெண் தெய்வங்களை வழிபாடு செய்யும் போது எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை, தீபம் போன்றவை மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் துர்க்கை அம்மனுக்கு வழிபாடு என்றாலே அதில் எலுமிச்சை தீபம் இருக்கும்.

இந்த எலுமிச்சை தீபத்தை ஏற்றவும் சில விதிமுறைகள் உண்டு. அதை சரியான முறையில் கடைபிடிக்கும் போது நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

எலுமிச்சை தீபம் ஏற்றும் முறை

முதலில் எலுமிச்சை தீபத்தை ஏற்றுவதனால் கிடைக்கும் பலனை தெரிந்து கொள்ளலாம். இந்த தீபத்தை ஏற்றி அன்னையை வணங்கும் போது நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த தீபத்தை ஏற்றும் போது நம்முடைய கர்மாக்களும் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி இந்த பிறவியில் நாம் தெரியாமல் செய்த சிறு தவறுகளும் பாவங்களும் மன்னிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடும் போது நம்முள் இருக்கும் கெட்ட எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் நமக்குள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

தீபத்தை ஏற்றும் போது பலரும் எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து அதன் சாறை பிழிந்து விடுவார்கள். அதன் பிறகு எலுமிச்சையை தலைகீழாக திருப்புவார்கள் அதாவது தோல் உள்புறமும் உள்ளே இருக்கும். சாறு இருக்கும் பக்கம் வெளிப்புறம் வரும்படி வைத்து ஏற்றுவார்கள். இது தவறான முறை என்று சொல்லப்படுகிறது.

பழத்தை அரிந்து சாறை பிழிந்த பிறகு அப்படியே அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் பழத்தை திருப்பி தீபம் ஏற்றக் கூடாது. இதற்கு காரணம் எலுமிச்சை பழத்தில் உள்ள அந்த அமிலம் ஆனது நம்முடைய நெகட்டிவ் எனர்ஜியை அழிக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது. அதில் எண்ணெய் ஊற்றி ஏற்றும் போது தான் அதற்கான முழு பலன் கிடைக்கும்.

- Advertisement -

பழத்தை திருப்பி அதன் தோளில் எண்ணெய் ஊற்றும் போது நமக்கு எந்த பலனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஆலயத்தில் இந்த தீபத்தை நாம் ஏற்றினாலும் இந்த தீபத்தின் முன்பு குறைந்தது ஐந்து நிமிடமாவது நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பழத்தில் இருந்து வரும் ஆற்றலும் அந்த தீபத்தில் ஆற்றலும் தான் நம்முடைய வேண்டுதலை பலிக்கச் செய்யும். ஆகையால் தீபத்தை ஏற்றி விட்டு உடனே ஆலயத்தை வலம் வர செல்லாமல் தீபம் ஏற்றி சிறிது நேரம் தீபத்தின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நம்முடைய பாவங்கள் கர்மா தவறுகள் அனைத்தும் நீங்கி வேண்டுதல்களை நிறைவேற்றி த் தருவதோடு அன்னையின் பரிபூரண ஆசியும் நமக்கு பெற்றுத் தரும் ஆகையால் தான் இந்த கனிக்கு ராஜா கனி என்று பெயர். மற்ற எந்த கனிக்கும் இல்லாத சிறப்பு அம்சங்கள் இந்த எலுமிச்சைக்கு இருப்பதற்கான காரணமும் இது தான்.

இதையும் படிக்கலாமே: கேட்டது உடனே கிடைக்க வேண்டுதல் வைக்கும் முறை

இனி ஆலயத்தில் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபடும் போது இது போல ஏற்றி வழிபடுங்கள். அன்னையின் பரிபூரண அருளை பெறலாம். இந்த தீபம் துர்க்கை அம்மனை வேறு யாருக்கு ஏற்றி வழிபட்டாலும் இதே முறையை தான் பின்பற்ற வேண்டும். எலுமிச்சை பழ தீப வழிபாட்டில் உள்ள இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது போல வழிபட்டு அன்னையின் அருளை முழுவதுமாக பெறலாம்

- Advertisement -