வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா? தோட்டம் போன்ற இடத்தில் ஒற்றை தீபம் ஏற்றுவது எதனால் தெரியுமா? இத தெரிஞ்சிக்காம விட்டுடாதீங்க!

murugan-vilakku
- Advertisement -

பொதுவாக தீபம் என்பது பூஜை அறையில் ஏற்றப்படும் ஒரு விளக்காகும். ஆனால் சில நேரங்களில் வாசலில் வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டிற்கு வெளியே துளசி மாடத்தில் வைத்து விளக்கு ஏற்றுவது, தோட்டப்பகுதிகளில் ஒற்றை விளக்கு ஏற்றுவது, மொட்டை மாடியில் கூட விளக்கு வைத்து ஏற்றுவது போன்றவற்றை நாம் பார்த்திருக்கக்கூடும். இப்படி பல்வேறு இடங்களில் விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன? இதற்கான பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். எல்லா தெய்வங்களின் அம்சமாகவும் விளங்கக்கூடிய இந்த காமாட்சி விளக்கானது காலை, மாலையும் இரு வேளையும் வீட்டில் எரிந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் செல்வ வளத்திற்கு பஞ்சமே இருக்காது. வறுமை என்பது அண்டாது என்கிறது சாஸ்திரங்கள். அது போல குபேர விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு போன்ற தீபங்களையும் ஏற்றலாம்.

- Advertisement -

பண வரவிற்கு குபேர விளக்கை வியாழன் கிழமைகளில் குபேர பகவானுக்கு ஏற்றப்படுகிறது. குத்துவிளக்கு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு ஏற்றப்படுகிறது. இதனால் செல்வ வளம் கூடும் என்பது நம்பிக்கை மேலும் அகல் விளக்கானது குலதெய்வத்திற்கு ஏற்றப்படுகிறது. உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து கண்டிப்பாக ஒவ்வொரு முறை பூஜை செய்யும் பொழுதும் அகல் விளக்கு தீபம் ஒன்றை ஏற்றி வையுங்கள். அதில் குலதெய்வம் கண்டிப்பாக ஆவாகனம் ஆவதாக ஐதீகம் உண்டு. மண் விளக்கு என்பதால் இயற்கையான முறையில் இந்த தீபம் நமக்கு நிறையவே நற்பலன்களை அள்ளிக் கொடுக்கிறது.

வாசலில் ஏற்றப்படும் தீபம் ஆனது வீட்டிற்குள் வரும் நல்ல தேவதைகளை வரவேற்கும். தேவாதி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், கண்ணுக்குத் தெரியாத அத்துணை தெய்வங்களின் திருபாதங்களையும் வரவேற்கும் விதமாக நம்முடைய வாசலில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். முந்தைய காலங்களில் எல்லாம் மாடம் அமைத்து மேற்புறமாக விளக்கை வைத்திருப்பார்கள். இப்போது அவ்வாறு நாம் ஏற்ற முடியாவிட்டால், வாசலில் இரு புறங்களிலும் வைத்து ஏற்றலாம்.

- Advertisement -

துளசி மாடத்தில் ஏற்றுவது துளசி அம்மனுக்கு நாம் செய்யும் விசேஷமான ஒரு பூஜை முறையாகும். தொடர்ந்து ஒருவர் துளசி மாடத்தில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் சுபகாரிய தடைகள் ஏற்படாது மேலும் கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்பது வராது. அது போல வீட்டில் தோட்டம் போன்ற வெளிப்புற பகுதிகளில் ஒற்றை தீபம் ஏற்றுவது எம தீபம் எனப்படும் ஒரு விளக்காகும். எம பயம் இருப்பவர்கள், ஆயுள் குறைவாக இருப்பவர்கள் ஆயுள் விருத்தி பெறுவதற்கு இதுபோல வெளிப்புற இடங்களில் எம தீபம் ஏற்றி வைப்பார்கள்.

ஒரு சிறிய அகல் விளக்கு ஒன்றில் தினமும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்தை எந்த திசையில் வைத்தும் நீங்கள் ஏற்றலாம். மேலும் இதை வீட்டிற்குள் வைத்து ஏற்றாமல் வெளியில் வைத்து ஏற்றினால் எம தீபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீபத்தை தோட்டம் போன்ற உங்களுடைய வெளிப்புற பகுதிகளில் மட்டும் அல்லாமல், நீங்கள் வளர்க்கும் மரம், செடிகளுக்கு அருகாமையிலும் வைத்து ஏற்றலாம்.. இதனால் குடும்பத்திற்கு வரக்கூடிய துர் சம்பவங்கள் அல்லது துர்சக்திகள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. மேலும் மொட்டை மாடியில் ஏற்றப்படும் விளக்கானது சூரிய, சந்திரனுக்கு ஏற்றப்படும் விளக்காகும். பகலில் சூரியனுக்கும், இரவில் சந்திரனுக்கும் ஏற்றி வைப்பது உண்டு. இதனால் சூரிய, சந்திர தோஷங்கள் நீங்கி, அவர்களுடைய அருளாசி கிடைக்கும்.

- Advertisement -