ஸ்டார் ஹோட்டல்களில் பிரியாணிகளுக்கு கொடுக்கப்படும் இந்த எம்ட்டி சால்னாவை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, இனி வீட்டில் பிரியாணி மட்டுமல்ல சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எது செஞ்சாலும் சைடிஷா இந்த சால்னா தான் கேட்பாங்க.

- Advertisement -

பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணி வகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள். அந்த சால்னாவின் சுவைக்கு இந்த சாதங்கள் சைலன்டாக உள்ளே சென்று விடும். அப்படி ஒரு சுவை மிகுந்த சால்னாவை மிகவும் எளிமையாக வீட்டிலும் செய்து விடக் கூடிய வகையில் செய்வதை பற்றிய பதிவு தான் இது.

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2, தக்காளி -3, இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன், தேங்காய் துருவியது – 3 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை -2 டேபிள் ஸ்பூன், உடைத்த கடலை – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் -1, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியாத் தூள் -1/12 டீஸ்பூன், சோம்பு -1 டீஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலைகள்- 2, கருவேப்பிலை -1 கொத்து, மஞ்சள் தூள் -1 டீஸ்பூன், உப்பு – டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த சால்னா செய்வதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பைப் பற்றி வைத்து ஒரு பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் சோம்பு சேர்த்து பிறகு வேர்க்கடலை, காய்ந்த மிளகாய்,தேங்காய் துருவல்,உடைத்த கடலை என அனைத்தையும் சேர்த்து நல்ல பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த இதை ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சால்னா செய்ய தொடங்கி விடலாம். அடுப்பில் பேனை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கொஞ்சம் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்த மசாலாகளை பட்டை, கிராம்பு, லவங்கம் இவற்றையெல்லாம் சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும் வரை வதங்க வேண்டும். இவையெல்லாம் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதுவும் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தக்காளி வதங்க கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கலந்து வதக்கி விடுங்கள். ஒரு பச்சை மிளகாய் நீட்டாக கீரி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிளகாய் தூள், தனியா தூள், உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அப்போது அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விடுங்கள். இந்த மசாலாக்கள் எண்ணெயில் வதங்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மசாலாக்களை வேக வையுங்கள். இப்பொழுது அடுப்பை மீடியம் ப்ளேமுக்கு மாற்றிக் கொள்ளலாம். இது ஒரு கொதி வந்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மூடி போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.

இது நன்றாக கொதித்தால் தான் வேர்கடலையின் பச்சை வாசனை போகும். பத்து நிமிடம் கொதித்த பிறகு மறுபடியும் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவு தான் சுவையான பிரியாணி சால்னா தயார்.

இதையும் படிக்கலாமே: அட இந்த மாவில் கூடவா முறுக்கு சுடுவாங்க? சப்பாத்தி மாவு போல இந்த மாவை பிசைந்தால், சத்து நிறைந்த மொறு மொறு முறுக்கு 10 நிமிடத்தில் தயார்.

இந்த சால்னா செய்வது மிக மிக சுலபம் மசாலாவை வறுத்து அரைக்கும் நேரம் மட்டுமே இதில் மற்றபடி இதில் செய்யப் பெரிய வேலை ஒன்றுமில்லை. ஆனால் சுவை பிரமாதமாக இருக்கும் பிரியாணிக்கு மட்டுமல்ல பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிக்கு கூட இதை இன்னும் கொஞ்சம் திக்காக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சால்னாவை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -