புதுசா வாங்கின பீங்கான் பொருட்களை மறக்காம கொஞ்ச நேரம் இதுல போட்டு எடுத்து வச்சிட்டா போதும். இனி எத்தனை வருடம் ஆனாலும் இந்த பொருள் உடையவே உடையாது.

pingan cup potato onion rice
- Advertisement -

நாம் காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளையும் எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தால் போதும். ஒரு முறை வாங்கிய பொருளை மறுமுறை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது . இதனால் பணமும் அதிக அளவில் மிச்சமாகும். இந்த வீட்டு குறிப்பு பதிவிலும் இது போல நம்முடைய பணத்தை அதிக அளவு மிச்சப்படுத்தக் கூடிய சில குறிப்களை பற்றி தான் தெரிந்து இப்போது கொள்ளப் போகிறோம்.

எல்லோர் வீட்டிலும் பீங்கான் தட்டு, டீ கப், கிண்ணம் போன்ற பொருட்கள் இருக்கத் தான் செய்யும். மற்ற பொருட்களை விட இந்தப் பொருட்கள் சீக்கிரமாக உடைந்து விடும். இதை வாங்கிய சில நாட்களிலே விரிசல் விட ஆரம்பிக்கும் கொஞ்ச நாட்களிலே அந்த இடங்களில் எல்லாம் உடைந்து விடும்.

- Advertisement -

இனி நீங்கள் புதிதாக பீங்கான் பொருட்களை வாங்கும் போது ஒரு ஹாட்பாக்சில் இந்த பீங்கான் பொருட்கள் முழுதும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு இறுக்கமாக மூடி விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் நாமாக கைத்தறி கீழே போட்டால் ஒழிய இந்த பீங்கான் பொருட்கள் உடையாது. தண்ணீர் வெதுவெதுப்பாக தான் இருக்க வேண்டும் அதிக சூட்டுடன் இருக்கக் கூடாது. அதேபோல் கொஞ்சம் பெரிய பொருட்களாக வாங்கி விட்டீர்கள் அதை ஹாட்பாக்ஸில் வைக்க முடியவில்லை என்றால் ஹாட் பாக்ஸ்க்கு பதிலாக குக்கரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல் வீட்டில் கத்தி, அருவாமனை, காய் சீவல், கத்திரிக்கோல், போன்றவை எல்லாம் அடிக்கடி மொக்கை ஆகி விடும். இதை ஷார்ப் செய்ய நாம் கடைகளில் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். இனி அது போல செலவழித்து செய்யாமல் நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பயன்படுத்திய ஸ்க்ரப்பர் எடுக்கக் கூடாது. புதிதாக உள்ள ஸ்கிரப்பரை தான் எடுக்க வேண்டும். இந்த ஸ்க்ரப்பரில் நாம் பயன்படுத்தும் இது போன்ற பொருட்களை லேசாக சிறிது நேரம் தேய்த்து அதன் பிறகு பயன்படுத்துங்கள். இவை எல்லாம் நல்ல ஷார்ப்பாக மாறி விடும்.

- Advertisement -

உருளைக்கிழங்கு நாம் எப்போது வாங்கினாலும் அதை அப்படியே வைத்தால் வாங்கிய ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே முளைத்து விடும் இதனால் கிழங்கின் ருசியும் மாறி விடும். இனி நீங்கள் உருளைக்கிழங்கு போட்டு வைக்கும் பேஸ்கட்டில் கொஞ்சம் நியூஸ் பேப்பரை கிழித்துப் போட்டு விடுங்கள். அதில் இந்த உருளைக்கிழங்கை போட்டு எடுத்து வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் முளைக்காததோடு கிழங்கும் பிரஷ் ஆக இருக்கும். இதே போல் உருளைக்கிழங்கை எப்போதும் வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. இப்படி வைத்தால் வெங்காயத்தின் ஈரத்தன்மை உருளைக்கிழங்கில் பட்டு கிழங்கு சீக்கிரம் அழுகி விடும்.

நம் வீட்டில் அரிசி பருப்பு போன்ற தானிய வகைகளை வாங்கி ஸ்டோர் செய்யும் போது அதில் ஒரு துண்டு கொட்டாங்குச்சி போட்டு வைத்து விடுங்கள். இதனால் பூச்சிகள் வராததோடு அதில் இருக்கும் ஈரப்பதத்தையும் இந்த கொட்டங்குச்சி இழுத்து விடும். இதனால் பொருட்கள் வீணாகாமல் பாதுகாப்பாக இருக்கும். கொட்டாங்குச்சி இல்லாத சமயத்தில் பூண்டை உரித்த பிறகு அதன் நடுவில் இருக்கும் தண்டு போன்ற பகுதியை இதன் இடையில் சொருகி வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலமும் பொருட்களில் வண்டு பூச்சி ஏதும் வராமல் இருக்கும்.

- Advertisement -

நம் வீட்டில் பயன்படுத்தும் மற்ற காய்கறிகளை விட இந்த பீட்ரூட் வாங்கிய மறுநாளே மேலிருக்கும் தோல் எல்லாம் வதங்கி விடும் . இனி நீங்கள் பீட்ரூட் வாங்கியதும் அதன் மேல் புறம் அடிப்புறம் என இரண்டு பக்கமும் நறுக்கி விட்டு அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு நன்றாக மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து விடுங்கள். ஒரு மாதம் ஆனால் கூட பீட்ரூட் புதிதாக வாங்கியது போலவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பல வருட டைல்ஸ் கறை கூட கைவலிக்க தேய்க்காமல் பத்து நிமிஷத்தில் மறைந்து பளிச்சின்னு மாற இது இருந்தாலே போதும். இப்படி செஞ்சா டைல்ஸில் மறுபடி உப்புக்கறை படியவே படியாது.

இந்த பதிவில் உள்ள குறிப்புகள் எல்லாம் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வீணாகாமல் எப்படி பயன்படுத்துவது என்பதும், இதன் மூலம் எப்படி நாம் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றியும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த குறிப்புகள் எல்லா இல்லத்தரசிகள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -