நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்

noodles
- Advertisement -

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகைதான் இந்த நூடுல்ஸ். மிக விரைவாக இதனை சமைக்க முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பம் இதற்கு உள்ளது . இந்த பதிவில் நூடுல்ஸ் வீட்டில் எப்படி சமைக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

noodles 1

நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :

- Advertisement -

நூடுல்ஸ் – 1 பாக்கெட்
எண்ணெய் – தேவையான அளவு
முட்டை – 3
உப்பு – தேவையான அளவு
மிளகு – சிறிதளவு
நறுக்கிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
கேரட் – சிறிதளவு
முட்டைகோஸ் – சிறிதளவு
குடை மிளகாய் – சிறிதளவு
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

நூடுல்ஸ் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து அது நன்றாக கொதிக்கும் போது நூடுல்ஸ் போட்டு 3 நிமிடம் வரை விட்டு எடுத்தால் நூடுல்ஸ் பிரிந்து வரும் அதனை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.

- Advertisement -

noodles 2

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை உடைத்து ஊற்றவும். பிறகு அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக வறுத்து அதனை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் காய்கறிகளை வதக்கி கொள்ளவும்.

வதக்கிய காய்கறியில் சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் வினிகர் ஊற்றி அதில் நாம் வேகவைத்து எடுத்த நூடுல்ஸ் மற்றும் வறுத்து எடுத்த முட்டை ஆகியவற்றை கலந்து நன்றாக கலந்து எடுத்தால் சுவையான நூடுல்ஸ் தயார்.

- Advertisement -

noodles 3

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

English overview:
Here we have Noodles recipe in Tamil. It is also called Noodles ingredients in Tamil or Noodles preparation in Tamil or Noodles seimurai in Tamil or Noodles seivadhu eppadi in Tamil.

- Advertisement -