- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரி தொல்லை நீங்க பெருங்காய பரிகாரம்

எதிரி தொல்லை நீங்க பெருங்காய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும், எதிரி தொல்லை ஒவ்வொரு மாதிரி இருக்கும். தொழிலில் எதிரி, செய்யும் வேலையில் எதிரி, அக்கம் பக்கத்து வீட்டில் எதிரி, உறவுகள் கூட எதிரிகளாக இருக்கலாம். இந்த எதிரி என் வாழ்க்கையில் இனிமேல் குறிப்பிடவே கூடாது. இந்த எதிரியால் எந்த பிரச்சனையையும் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்கக் கூடாது.

இந்த எதிரி என்னை விட்டு தூர விலகி சென்று விட வேண்டும். இவனுடைய பெயர் கூட திரும்பவும் என் செவிகளில் விழக்கூடாது என்று நினைப்போம். இதுபோல உங்களுக்கும் யாராவது எதிரிகள் இருக்கிறார்களா. அந்த எதிரி உங்களை விட்டு தூர விலகி செல்ல இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

இது ஒரு தாந்திரீக பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரி உயிருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ எந்த ஒரு ஆபத்தும் வராது. அந்த எதிரி உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டான். தானாக உங்களை விட்டு விலகி சென்று விடுவான். அதற்கான பரிகாரம் தான் இது.

எதிரியை ஒதுக்கி வைக்க பெருங்காய பரிகாரம்.

ஒரு பெருங்காய கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பெருங்காய கட்டியை கையில் வைத்துக்கொண்டு, உங்களுடைய எதிரியின் பெயரை அந்த வெள்ளை காகிதத்தில் எழுத வேண்டும். குறிப்பிட்ட எதிரியின் பெயரை சொல்லி, இந்த எதிரி என்னை விட்டு விலக செல்ல வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு எழுதுங்கள்.

- Advertisement -

நீங்கள் எழுதக்கூடிய பெயர் வெள்ளை காகிதத்தில் தெரியாது. ஏனென்றால் பெருங்காயத்தை வைத்து எழுதுகிறீர்கள். அதைப்பற்றி கவலை வேண்டாம். ஒருமுறை அந்த பெருங்காயத்தை கொண்டு வெள்ளை காகிதத்தில் எதிரியின் பெயரை எழுதி, அந்த பேப்பரை மடித்து சின்னதாக ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு இந்த டப்பாவை கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட வேண்டும்.

எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் புதைக்கலாம். உங்க வீட்டுக்கு முன் பக்கம், பின பக்கம், இடம் இருந்தால் அந்த இடத்தில் கூட லேசாக மண்ணைத் தோண்டி இதை புதைத்து வைத்து விடலாம். அந்த மீதம் இருக்கும் பெருங்காயத்தையும் அந்த பேப்பருக்குள்ளேயே வைத்து மடித்து வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், பேப்பரில் பெயர் எழுதிய அந்த எதிரி உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

- Advertisement -

அவர்களால் உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் வராது‌. சில எதிரிகள் எல்லாம் நம்மை வாழ விடாமல் நம்மை தோற்கடிக்கவே நிறைய சூழ்ச்சி செய்வார்கள். ஏவல் பில்லி சூனியத்தை கூட ஏவி விடுவார்கள். அப்படிப்பட்ட எதிரிகளை எல்லாம் கூட நம்மிடம் இருந்து விலக்கி வைக்க இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். ஒரு முறை, ஒரு எதிரியின் பெயரை மட்டும் தான் எழுத வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்

அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த நேரத்தில் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை நல்ல நோக்கத்தோடு தான் செய்ய வேண்டும். கெட்ட எண்ணத்தில் யாரும் கெட்டுப் போக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்வோம். எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய தாந்திரீக பரிகாரம் சமர்ப்பணம்.

சற்று முன்