எதிரிகளை விரட்ட தூபம்

ethiri thoobam
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரிடமும் பார்த்து பழக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் நம்முடன் இருப்பவர்களிலே யார் நல்லவர் யார் தீயவர் என்று கண்டுபிடிப்பது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. எல்லோரும் இப்படித் தான் என்ற கண்ணோட்டத்தில் சொல்வதில்லை. ஆனால் யாரையும் நம்புவதற்கு இல்லை என்பதையும் மறுக்க முடியாது அல்லவா.

ஒவ்வொரு மனிதனுடைய வீழ்ச்சியோ ஒவ்வொருவருடைய கஷ்டத்தையும் நினைத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அவர்களின் உடன் இருந்தவர்கள் தான் காரணமாகவே இருப்பார்கள். இதில் கண்ணுக்குத் தெரியாத எதிரி எனில் இவர்கள் இதை செய்வார்கள் என்று நாம் நினைத்துக் கூட பார்க்க மாட்டோம் அப்படிப்பட்டவர்கள் தான் நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் தடையாக இருப்பார்கள்.

- Advertisement -

அப்படி இது போன்றோரின் தீய பார்வை தீய எண்ணங்கள் தீய சக்திகள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நம்முடைய முன்னேற்ற தடையில்லாமல் கொண்டு செல்லவும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அத்தகைய ஒரு பாதுகாப்பு கவசம் தான் இந்த ஒரு தூபம் இதை எப்படி போட வேண்டும் இதற்கு என்னெல்லாம் தேவை என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எதிரிகள் தலைதெரித்து ஓட தூபம்

இந்தத் தூபம் போட நமக்கு தேவையான முக்கியமான பொருள் எனில் அது பேய்மிரட்டி இலை. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அடுத்து மருதாணி இலை, மருதாணி விதை அல்லது மருதாணி பூ இதில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் வெள்ளை குங்கிலியம், பால் சாம்பிராணி வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் தூள் செய்து ஒன்றாக ஒரே டப்பாவில் போட்டு எடுத்து வைத்து விடுங்கள். இத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து விடுங்கள். சாம்பிராணி தூபம் போடுவதற்கான தூள் தயாராகி விட்டது. இந்த தூபத்தை வெள்ளிக்கிழமையில் போடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமையில் காலை எப்போதும் போல் வீட்டில் சாமி காண பூஜைகள் செய்யுங்கள். அப்பொழுது வெறும் சாம்பிராணி கொண்டு தூபம் போடுங்கள். அந்த தூபத்தில் நீங்கள் தயார் செய்து வைத்து இந்த பொருட்களை போட வேண்டாம். ஏனெனில் காலையில் போடும் எந்த தூபமானது வீட்டில் தெய்வ கடாட்சத்தை ஏற்படுத்தக் கூடியது.

- Advertisement -

அன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி அதை குளிர்வித்த பிறகு இந்த தீபத்தை போடுங்கள். ஏனெனில் இது தீயவற்றை உள்ளே வரவிடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. அதை போல் உள்ளிருக்கும் தீய சக்திகளையும் வெளியே விரட்டி அடிக்க கூடியது. அதை மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு போடுவது தான் சிறந்தது.

முதல் முறையாக இந்த தூபத்தை வெள்ளிக்கிழமையில் போட துவங்குகள். அதன் பிறகு செவ்வாய் ஞாயிறு போன்ற கிழமைகளிலும் செய்யலாம். எந்த கிழமையில் செய்தாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் செய்ய வேண்டும். அதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த துன்பத்தை நீங்கள் தொடர்ந்து போடும் போது உங்களை மட்டும் இன்றி நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட எந்த தீயதும் நெருங்காது என்ற தைரியத்துடன் இருக்கலாம்.

தீயவை நம்மை நெருங்காமல் இருக்கவும், நம்மை சுற்றி உள்ளவர்களின் தீய பார்வை நம்மை தாக்காமல் இருக்கவும் இது போன்ற வழிமுறைகளை நம் முன் காலத்தில் இருந்து பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் மாற்றங்களை செய்து இப்பொழுது நாம் கடைபிடிக்கிறோம் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க உள்ளங்கை பரிகாரம்

இவையெல்லாம் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று தானே அன்றி பிறரை காயப்படுத்த அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -