நண்பர்கள் போல நடித்து, உங்களுடனே இருந்து, உங்களது முன்னேற்றத்தை தடுக்க சதி செய்யும் எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இதோ ஒரு சக்தி வாய்ந்த தீர்வு உங்களுக்காகவே!

narasimmar-vilakku

எதிரிகள் எதிரிகளாக இருந்து விட்டால், அவர்களை நேரில் சந்தித்து முட்டிமோதி பிரச்சனை செய்து, வாழ்க்கையில் சுலபமாக எதிர்கொள்ளலாம். ஆனால், நண்பர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு நம்முடன் சுற்றும் எதிரிகளை நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நாம வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக, நம் பின்னால் குத்தும் இந்த எதிரிகளை எப்படித்தான் சமாளிப்பது. நமக்கு வரக்கூடிய பல நல்ல வாய்ப்புகள் வராமல் போவதற்கு நம்முடன் இருக்கும் இந்த எதிரிதான் காரணமாக இருப்பான். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

enemy1

அனுபவப்பூர்வமாக, இப்படிப்பட்ட சூழ்நிலையை நிறைய பேர் இன்று அளவும் அனுபவித்துதான் வருகிறார்கள். குறிப்பா நமக்கு மேல வேலை செய்பவர்கள், நமக்கு மேல் பதவியில் இருப்பவர்கள், நம்மை முதலாளியிடம் நல்ல பேர் வாங்க விடவே மாட்டாங்க! படிக்கும் மாணவர்களிடமிருந்து, வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து, குடும்பம் நடத்தும் வீடு வரை, இந்த பிரச்சனை உள்ளது.

நன்றாக தெரிந்தவர்கள் நம்முடன் சிரித்து பேசுவார்கள். நம் கூடவே இருப்பார்கள். ஆனால், நம்முடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தான் தடையாக இருப்பார்கள். இது நமக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். நம்மாலும் ‘ஏன்’ என்ற கேள்வியை கேட்க முடியாது. அவர்களாலும் சில சூழ்ச்சிகளை நிறுத்த முடியாது. இப்படியே தொடர்கதை போல செல்லும். இதில் பாதிப்பது நம்முடைய வாழ்க்கைக்கு மட்டும்தான்.

vepilai ennai

சரி, இதற்கு நிரந்தர தீர்வைப் பெற ஆன்மீக ரீதியான ஒரு வழி உள்ளது. ஒரு சிறிய அளவிலான பித்தளை தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மண் அகல் தீபத்தை வைத்து, வேப்பெண்ணை ஊற்றி குறிப்பாக நீலநிற திரியைப் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். நீல நிறம் என்பது நரசிம்மருக்கு உரியது. வேப்பெண்ணையால் தீபம் ஏற்றினால் எதிரிகளது தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டாம். வரவேற்பறையில் அல்லது உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் இடவசதி உள்ளதோ, அந்த இடத்தில் இந்த சிறிய தாம்பூலத் தட்டை வைத்து, கிழக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபத்தை ஏற்றும்போது மட்டும் 3 முறை ‘ஓம் நமசிம்மாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு, எதிரி தொல்லை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டால் போதும்.

color-thiri

தீபம் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றப்படவேண்டும். காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்குமோ அந்த நேரத்தில் எல்லாம். இந்த தீபத்தை ஏற்ற தொடங்கிய சில நாட்களிலேயே உங்களுடன் இருக்கும் எதிரியாக இருந்தாலும் சரி, உங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தாலும் சரி, உங்களை வீழ்த்துவதற்கு உங்களுக்கு எதிரான சதித் திட்டங்களை தீட்டவே மாட்டார்கள். உங்களுடைய நினைப்பு அவர்களுக்கு வராது.

deepam

இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் உங்களுடைய எதிரிகளுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. இந்த தீபம் உங்களது எதிரிகளை உங்கள் பக்கம் வர விடாமல் தடுப்பதற்காக மட்டுமே. நரசிம்மரை வேண்டி நாம் ஏற்றக் கூடிய தீபம், எதிரிகளுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கோ, உயிருக்கோ எந்த ஒரு ஆபத்தையும் வர விடாது என்ற கருத்தை உறுதியாகக் கூறிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தொட்டதெல்லாம் வெற்றியாக, நெற்றியில் இதை இட்டுக் கொள்ளுங்கள். குடிசையில் வசிப்பவர்களும், சீக்கிரமே கோட கோபுரத்தின் அதிபதி ஆகிவிடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.