பொறாமைப்படும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க கையில் இந்த கயிறு எப்படி கட்டிக் கொள்ள வேண்டும் தெரியுமா?

kayiru
- Advertisement -

கண் திருஷ்டிகாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் கட்டப்படும் சாதாரண கருப்பு கயிறு நிறையவே சக்திகளைக் கொண்டுள்ளது. சாதாரண கருப்பு கயிறு மற்றும் சிகப்பு கயிற்றை விட அதில் மந்திரங்கள் சொல்லி முடிச்சிட பட்டிருக்கும் கயிற்றுக்கு கூடுதல் சக்தி உண்டு. இப்படி கையில் கட்டிக் கொள்ளும் கயிறுக்கு பொறாமைப்படும் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் சக்தி உண்டா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்மை காத்து, கருப்பு அண்டவிடாமல், துஷ்ட சக்திகள் நெருங்க விடாமல் குழந்தைப் பருவத்திலேயே இடுப்பிலும், கைகளிலும் கருப்பு கயிறு அல்லது சிகப்புக் கயிறை வாங்கி கட்டி விடுவார்கள். இந்த கயிறு நம்முடன் இருக்கும் போது இறைவனே இருப்பதாக ஒரு ஆழ்ந்த நம்பிக்கை உண்டாவது தான் இதனுடைய பலம். குழந்தைகள் மீது இருக்கும் கண் திருஷ்டிகள் அனைத்தையும் இந்த கயிறு கிரகித்துக் கொள்ளும். நீங்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக உங்களுடைய உடலில் ஏதாவது ஒரு இடத்தில் முடிச்சிடப்பட்ட கயிறு இருப்பது நல்லது.

- Advertisement -

தெய்வீக திருத்தலங்களில் கொடுக்கப்படும் கயிறு கண்டிப்பாக மந்திரங்கள் சொல்லி பல முடிச்சுகள் போடப்பட்டு இருக்கும். அப்படி முடிச்சுகள், மந்திரங்கள் சொல்லி போடா விட்டாலும், அந்த திருத்தலத்தில் எதிரொலிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் கயிற்றுக்கு தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. சாதாரண பேன்சி ஸ்டோருக்கு சென்று இது போல் கயிறு வாங்கி கட்டிக் கொள்வதை விட, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கிருந்து கயிறு வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு கட்டிக் கொள்வது நல்லது.

இடுப்பு, கழுத்து, கைகள் மட்டும் அல்லாமல் சிலர் கால்களிலும், கையின் மேற்பகுதியிலும் கட்டிக் கொள்வதை பார்த்திருப்போம். இட காலில் கட்டிக் கொண்டால் எதிர்மறை ஆற்றல் நம்மை நெருங்காது. மேலும் தேவையற்ற நோய் தாக்குதல்கள் உண்டாகாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய கையிரினை சாதாரணமாக நாம் கட்டிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.

- Advertisement -

எந்த ஒரு சாமி கயிறாக இருந்தாலும் அதை பூஜை அறையில் ஒரு நாள் முழுவதும் வைத்து பூஜை செய்து பின்னர் தான் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று அல்லது ஐந்து நூலிழைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அவற்றைத் திரித்து கயிறு போல் மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்பது முடிச்சுகள் அதில் போட்டுக் கொள்ளுங்கள். ஒன்பது முடிச்சுகளும் நவகிரகங்களை குறிக்கிறது.

முடிச்சுகள் போடப்பட்ட பின்பு பூஜை அறையில் ஒரு தாம்பூல தட்டில் வைத்து இறைவனுக்கு உரிய நைவேத்தியம் படைத்து மனதார வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் அந்த கயிற்றுக்கு சக்தி உண்டாகும். பின்பு அதன் இடையில் ஒரு விரலி மஞ்சள் ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதை பூஜை அறையில் வைத்து மனதார உங்களுடைய எதிரிகளின் தொல்லை நீங்கவும், அவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்கவும் வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கயிற்றை எடுத்து கட்டிக் கொண்டு உற்சாகத்துடன் வீட்டை விட்டு கிளம்பி பாருங்கள், உங்களுக்கு தடையை இல்லாத வெற்றி கிடைக்கும்.

- Advertisement -