எதிரி தொல்லை நீங்க தீபம்

amman agal dheepam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் நாம் சமாளிக்க வேண்டிய பல பிரச்சனைகளில் எதிரி தொல்லை மிகவும் முக்கியமானது. இது பணிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் யாரோ ஒருவரால் நிச்சயம் ஏதோ ஒரு தொல்லை இருக்கத் தான் செய்கிறது. இதற்கெல்லாம் காரணம் தன்னுடன் இருக்கும் ஒரு சக மனிதன் நன்றாக வாழ்வதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத நிலை தான்.

அதற்காக நாம் நம்முடைய முன்னேற்றத்தை எந்த காரணத்திற்காகவும் நிறுத்திக் கொள்ள முடியாது அல்லவா. ஆனால் எதிரிகள் நம்மிடம் நெருங்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அது எப்படி அதற்கான வழிமுறை என்ன என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

எதிரிகள் நம்மை நெருங்காமல் இருக்க

எதிரிகள் நம்மை நெருங்காமல் இருக்க வேண்டும் எனில் அதற்கு பல தாந்திரீக பரிகார முறைகள் இருக்கிறது. இருப்பினும் அனைவராலும் செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பரிகாரத்திற்கு காய்கறிகளிலே அசைவ காய்கறி என்று சொல்லப்படும் வெங்காயத்தை கொண்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

வெங்காயத்தில் எப்படி தீபம் ஏற்றுவது என்று அனைவரும் யோசிக்கலாம். ஒரு பெரிய அளவு வெங்காயத்தை வாங்கி அதின் நடுப்பகுதியில் நறுக்க வேண்டும் இப்போது வெங்காயம் இரண்டு பாதியாக வந்து விடும். நறுக்கிய வெங்காயத்தின் உள்ளே எடுத்தால் வட்டமாக வெங்காயம் தனியாக பிரிந்து வரும். அந்த பகுதியை கொஞ்சம் எடுத்து விட்டால் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் அளவிற்கு குழி வந்து விடும்.

- Advertisement -

அந்தக் குழியில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரே ஒரு தீபம் ஏற்றினால் போதும். இந்த தீபம் ஏற்றும் போது குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு உங்களுக்கு எதிரி தொல்லை இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை பூஜை அறையிலும் ஏற்றலாம் தவறில்லை.

அந்த எதிரி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிவராக இருக்கலாம் அல்லது அதிகாரிகளாக இருக்கலாம். அக்கம் பக்கத்தார் அல்லது உறவினர்களாக கூட இருக்கலாம்.ஒரு வேளை யார் என்றே தெரியவில்லை, ஆனால் யாரோ நமக்கு தொல்லை தருகிறார்கள் என்று மனதில் பட்டாலோ, மனதில் ஒருவித குழப்பமான நிலை, பய உணர்வு போன்றவை இருந்தாலும் அவை சரியாக இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம்

இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றும் போது உங்களுக்கு தொல்லை கொடுப்பவரின் மனநிலையே மாறி விடும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இது சக்தி வாய் தீபமாக கருதப்படுகிறது. இந்த தீபமுறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் ஏற்றி நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -