எதிரிகளை ஒழித்துக்கட்டும் எருக்க இலை தீபம். இந்த தீபத்தை ஏற்றினால் எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டாங்க. உங்களை பார்த்தாலே தெரிச்சு ஓடிடுவாங்க.

erukan-ilai
- Advertisement -

அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கக்கூடிய எதிரிகள், மறைமுகமாக நம்மை தாக்கும் எதிரிகள், அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் எதிரிகள், சொந்த பந்தங்களில் உள்ள எதிரிகள், இதுநாள் வரை ரொம்பவும் நண்பர்களாக உறவினர்கள் போல இருந்தவர்கள் கூட, எதிரிகளாக துரோகிகளாக மாறிவிட வாய்ப்புகள் உள்ளது. இவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன நாட்கள் போய், இவர்களைப் பார்த்தாலே எரிச்சலாக வருது என் வாழ்க்கையின் முதல் எதிரி இவங்கதான் என்று சொல்லும் அளவிற்கு கூட கால சூழ்நிலை மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட எதிரிகளால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா.

அவர்களை உங்கள் வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா. ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரம் உங்களுக்காக. இதை செய்வதன் மூலம் எதிரி உயிருக்கோ எதிரி குடும்பத்துக்கோ எந்த ஒரு பாதிப்பும் வராது. அந்த எதிரி உங்களை பற்றின நினைப்பை மறந்து விடுவான். அவ்வளவு தான்.

- Advertisement -

எதிரிகளை ஒழித்துக்கட்டும் எருக்கஇலை தீபம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற கணக்கில் எருக்கன் இலை தேவை. இந்த இலையை நன்றாக இடித்து மசித்தால் அதிலிருந்து கொஞ்சம் சாறு கிடைக்கும். அதில் பஞ்சு திரியை போட்டு நனைத்து நிழலிலேயே உலர வைத்துக் கொள்ள வேண்டும். எருக்கன் இலையில் இருந்து வெளிவரக் கூடிய சாறு விஷத்தன்மை கொண்டது. ஆகவே இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு கையை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்த திரியோ, அல்லது எருக்க இலையோ குழந்தைகள் கையில் படாமல் பார்த்துக் கொள்ளவும். சரி இப்போது எருக்கன் இலை சாறு நிறைந்த பஞ்சி திரி தயாராக இருக்கிறது. இதை வைத்துதான் விளக்கு ஏற்ற வேண்டும்.

இரண்டு மண் அகல் விளக்குகள் எடுத்துக்கோங்க. அதை ஒரு தாம்பல தட்டில் வைத்து, வேப்ப எண்ணெய் ஊற்றி இந்த பஞ்சுதிரிகளை அந்த விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்கை செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலம் நேரம் காலை 9.00 – 10.30, மாலை 3.00 – 4.30.

- Advertisement -

இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றக்கூடாது. வீட்டின் வரவேற்பறை அல்லது வீட்டிற்கு வெளி பக்கத்தில் ஏதாவது பால்கனி போல இடம் இருந்தால் அந்த இடத்தில் ஏற்றுங்கள். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அப்படியே விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் போல எரிந்தால் கூட போதும். இப்படியாக எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று வேப்ப எண்ணெய் ஊற்றி ஏற்றிய மண் அகல் விளக்குகளை மீண்டும் இறைவழிபாடு செய்வதற்கு பயன்படுத்த வேண்டாம். இந்த பரிகாரத்தை எத்தனை செவ்வாய்க்கிழமை செய்யணும்.

இதையும் படிக்கலாமே: கையில் ஒரு ரூபாய் கூட இல்லையேன்னு இனி கவலை பட வேண்டாம். சனிக்கிழமையில் அரச இலையில் இப்படி எழுதி வைத்து கொள்ளுங்கள். பணம் பத்து திக்கிலும் இருந்தும் பறந்தோடி வரும்.

எதிரிகளால் உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருதோ அப்போதெல்லாம் ஒரே ஒரு செவ்வாய் கிழமை மட்டும் இதை செய்து கொள்ளுங்கள். எதிரிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக இந்த விளக்கு அல்ல. எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது, எதிரிகள் நம்மைப் பற்றி சிந்திக்க கூடாது என்பதற்காக இந்த விளக்கு. அவ்வளவுதான். நல்லதை மட்டுமே நினைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை, நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -