எதிர்மறை ஆற்றல்கள் விலக அம்மன் வழிபாடு

kaliamman
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் தொடர்ச்சியாக பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. துன்பங்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள், முதலில் தங்கள் வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்பதாகவே நினைப்பார்கள். இந்த எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. மேலும் இந்த பரிகாரங்களை பயன்படுத்தி பணத்தை வாங்கி சம்பாதிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக நாம் தெய்வத்தை தான் நாட வேண்டுமே தவிர்த்து வேறு யாரையும் நாடக்கூடாது. அப்படி நாம் தெய்வத்தை நாடும் பட்சத்தில் அந்த தெய்வம் நிதானமாக நம் பிரச்சினையை சரி செய்தாலும் அதை நிரந்தரமாக சரி செய்து விடுவார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு எலுமிச்சம் பழத்தை வைத்து அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அது தானாக வந்ததாக இருந்தாலும் சரி அல்லது பிறர் நமக்கு செய்ததாக இருந்தாலும் சரி அதை சரி செய்வதற்கு நாம் அம்மனின் திருவடிகளில் சரணாகதி அடைய வேண்டும். அப்படி நாம் சரணாகதி அடையக்கூடிய அம்மன் சாந்த ரூபமாக இல்லாமல் உக்கிர தேவதையாக திகழ வேண்டும்.

இந்த எதிர்மறை ஆற்றல்களை விலகக்கூடிய சக்திகள் அதிகமாக உக்கிர தெய்வத்திற்கு தான் இருக்கிறது. உதாரணமாக துர்க்கை அம்மன், காளியம்மன், வராகி அம்மன், பிரத்தியங்கிரா தேவி, பைரவி போன்ற உக்கிர தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் செய்ய வேண்டும். இரண்டு தினங்களிலும் செய்வதாக இருந்தாலும் எந்த தவறும் இல்லை. அருகில் இருக்கக்கூடிய உக்கிர தேவியின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கையில் 9, 18, 27, 36 போன்ற 9 வரிசைகளில் வரக்கூடிய எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வாங்கி மாலையாக கோர்த்துக்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த மாலையை அம்மனுக்கு சாற்றி விட்டு, தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய பிரச்சனை என்னவோ அதாவது எதிர்மறை ஆற்றல்கள் நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதார முழு நம்பிக்கையுடன் அம்மனிடம் கோரிக்கையாக வைக்க வேண்டும்.

இப்படி கோரிக்கையை வைத்துவிட்டு வீடு திரும்பிய பிறகு வீட்டை கல் உப்பை போட்டு துடைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து பௌர்ணமி அல்லது ஐந்து அமாவாசை தோறும் செய்துவர உக்கிர தெய்வமான அம்மன் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கி நேர்மறையான ஆற்றல்களை அதிகரிப்பதோடு, நன்மைகள் அனைத்தையும் செய்வார்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் மாசி முதல்நாள் முருகர் வழிபாடு

நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது தெய்வ சக்தி தான். தெய்வத்தை முழுமனதோடு நம்பி தெய்வ வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றல்களும் அண்டாது.

- Advertisement -