கெட்ட எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்குள் வந்து விட்டார்களா? அதனால் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? இனிமேல் அவர்கள் வரும்பொழுது இப்படி செய்யுங்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் எதுவுமே நம்மை ஒன்றும் செய்யாது.

kan drustri pariharam
- Advertisement -

மனிதர்கள் அனைவருக்கும் நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்று இருக்கத்தான் செய்யும். அதில் எது அதிகமாக இருக்கிறதோ அதை பொறுத்து தான் அவர்களிடம் இருந்து வரும் ஆற்றலும் இருக்கும். ஒருவர் வளர்ச்சி அடைகிறார் என்னும் பொழுது அவரைப் பார்த்து இன்னும் நன்றாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்தால் அது நல்ல எண்ணம். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு வளர்ச்சியா என்று யோசித்தாலே அதனால் எதிர்மறை அதிர்வுகள் தான் ஏற்படும். அப்படி எதிர்மறை அதிர்வுகள் ஏற்பட்டு விட்டால் அதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை தான் நாம் கண் திருஷ்டி என்று சொல்கிறோம். கண் திருஷ்டி ஏற்பட காரணமாக இருக்கும் நபர்களை நம்மால் ஒதுக்கி வைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களின் எதிர்மறை அதிர்வை போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் நபர்களால் நமக்கு கண் திருஷ்டி ஏற்படும் என்னும் சமயத்தில் அவர்களை நம்மால் புறக்கணித்து விட முடியும். ஆனால் உறவினர்கள் என்ற பெயரில் வருபவர்களின் கண் திருஷ்டியை போக்குவதற்கு அவர்களை நம்மால் புறக்கணிக்க முடியாது. அப்படி வருபவர்களால் கண் திருஷ்டி ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் பல ஏற்படும். அவர்கள் வந்த பிறகுதான் அந்த பிரச்சனைகளை வந்தது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சில எளிமையான வழிமுறைகளை நாம் பின்பற்றினால் அவர்களின் எதிர்மறை அதிர்வலைகளில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் தப்பிக்க வைக்க முடியும். பொதுவாக நாம் அனைவரும் நம் வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் குடிப்பதற்காக நீரை தருவோம். அவ்வாறு தரும் பொழுது கண்ணாடி டம்ளரில் நாம் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்படி நாம் கொடுத்தால் அந்த நீரில் அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் கரைந்து விடும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்கள் அமர்ந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது கப்பிலோ கல் உப்பை போட்டு வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் இருந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை அந்த உப்பு உட்கிரகித்துக் கொள்ளும். இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து அந்த உப்பை நாம் கால்படாத இடத்தில் எங்காவது தூக்கிப் போட்டு விட வேண்டும். அல்லது தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். இப்படி செய்தாலும் அவர்களின் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை பாதிக்காத வண்ணம் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நம் வாழ்வில் இருக்கும் அனைத்து எதிர்மறைகளையும் நீக்கி வளமோடு வாழ ஆஞ்சநேயருக்கு இந்த நாளில் இப்படி தீபம் ஏற்றி வழிபட்டு பாருங்கள்.

இந்த எளிய வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் நம் வீட்டிற்கு வரும் நபர்களின் மனதையும் நோகடிக்காமல் அவர்களால் நமக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -