நம் வாழ்வில் இருக்கும் அனைத்து எதிர்மறைகளையும் நீக்கி வளமோடு வாழ ஆஞ்சநேயருக்கு இந்த நாளில் இப்படி தீபம் ஏற்றி வழிபட்டு பாருங்கள்.

hanuman deepa valipadu
- Advertisement -

அஞ்சாநெஞ்சனாக அஞ்சலையின் புதல்வனாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். இவரை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ராமா என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து நமக்கு கை கொடுத்து உதவக்கூடிய அற்புதமான தெய்வம். இவரை நாம் வணங்குவதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் இருந்தாலும், எந்த கிழமையில் எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் அவர் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிர்மறைகள் அனைத்தையும் மாற்றி நல்ல வாழ்வை வழங்குவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எல்லா தெய்வங்களும் தன் பெயரைச் சொல்லி அழைத்தால் தான் வருவார்கள். ஆனால் தன் பெயரை சொல்லி அழைக்காமல் தன்னுடைய தெய்வமான ராமபிரானின் பெயரை சொல்லி அழைத்தாலோ அல்லது நினைத்தாலோ ஓடோடி வந்து அருள் புரியும் அற்புதமான தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். இவர் சிவனின் மறு அவதாரமாக ராமருக்கு துணை புரிவதற்காக பிறப்பெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பொதுவாக அனைவரும் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும் என்றால் சனிக்கிழமை அன்றுதான் வழிப்படுவார்கள். ஆனால் ஆஞ்சநேயருக்கு என்று உகந்த நாட்களாக செவ்வாய், வியாழன், சனி போன்ற மூன்று நாட்களும் திகழ்கிறது. இந்த மூன்று நாட்களிலும் அவரை எந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயரை நாம் செவ்வாய்க்கிழமை அன்று வழிபடும் பொழுது அவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து அவரை வழிபட வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் அவர் நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பையும், நேர்மறை ஆற்றல்களையும் வழங்குவார்.

- Advertisement -

வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபடும் பொழுது அவருக்கு வேப்ப எண்ணையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் அவர் நீக்கிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நம் மனதை ஒருநிலைப்படுத்தக்கூடிய ஆற்றலையும் அவர் நமக்கு வழங்குவார்.

சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது நாம் அவருக்கு நல்லெண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் நல்லெண்ணையில் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய தீய எண்ணங்கள் அனைத்தும் மாறி, நல்ல எண்ணம் நம் மனதில் உருவாகும். மேலும் சனி பகவானின் அருளால் நமக்கு நிகழக்கூடிய பாதிப்புகள் குறையும்.

- Advertisement -

எந்த கிழமையில் நாம் தீபம் ஏற்றினாலும் அதில் நாம் தாமரை தண்டு திரியை உபயோகப்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் அதன் பலன் நமக்கு மிகவும் அற்புதமாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வற்றாத செல்வம், ஆரோக்கியம், சந்தோசம் இவை அனைத்தும் பெற இப்படி எளிமையான முறையில் இந்த கலச வழிபாடு செய்யுங்கள். என்றென்றைக்கும் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும்.

தன்னை நாடி வந்த பக்தர்களை சோதனை செய்யாமல் அவர்களை ஆறுதல் படுத்தி அவர்களுக்கு நன்மை வழங்கக்கூடிய தெய்வமாக திகழும் ஆஞ்சநேயரை நாமும் இந்த முறைப்படி வழிபட்டு நம் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.

- Advertisement -