- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல் விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்.

எதிர்மறை ஆற்றல் விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்.

- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து பஞ்சமி திதி இருக்கிறது. இன்றைய தினம் வாராகி அன்னையை வழிபாடு செய்தவர்கள், வழிபாடு செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் பின் சொல்லக் கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்தால், உங்களை பிடித்த எதிரி பிரச்சனை, கண் திருஷ்டி பிரச்சனை, எல்லாம் உங்களை விட்டு அடியோடு நீங்கிவிடும். இன்று இரவு தூங்க செல்வதற்கும் முன்பு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வாராஹி பரிகாரம்

இன்று தூங்க செல்வதற்கு முன்பாக குடும்பத் தலைவி இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டு உறுப்பினர்களை எல்லாம் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். உங்களுடைய உள்ளங்கைகளில் 1 கைப்பிடி அளவு வெண்கடுகு எடுத்துக்கொள்ளுங்கள். இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த வெண்கடுகை வாங்கி தூபம் போடுவது வழக்கமாக இருக்கிறது. உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் வெண்கடுகையே பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

1 கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் தலையை எல்லாம் மூன்று முறை சுற்றி விடுங்கள். பிறகு உங்களுக்கு நீங்களே சுற்றிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வெளியில் சென்று ஒரு மண் அகல் விளக்கில் கற்பூரம் வைத்து, நெருப்பு மூட்டி இந்த வெண்கடுகை அந்த கற்பூரத்தில் போட்டு விட்டால் உங்களைப் பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் நீங்கிவிடும். உடம்பை பிடித்த தரித்திரம் நீங்கும். எதிரி தொல்லையும் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை அன்று பஞ்சமி திதி வந்திருக்கும் இந்த நாளில் வாராகியை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய பிரச்சனைக்கு இன்றே முற்றுப்புள்ளி வைக்கப்படும். நம்பிக்கையோடு செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்து விட்டு கை கால்களை கழுவிக்கொண்டு, தூங்க செல்வதற்கு முன்பு நீங்கள் படுக்கின்ற அறையில், நான்கு மூலைகள் இருக்கும் அல்லவா, அந்த நான்கு மூலையிலும் கொஞ்சம் வெண்கடுகை தூவி விட்டு படுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து அந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி எடுத்து குப்பைத் தொட்டியில் வீட்டிற்கு வெளியே போட்டு விடவும். இது உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்து வெளியே தள்ளிவிடும். நிறைய பேர் சொல்லலாம். எங்களுடைய வீட்டில் வெண்கடுகு இல்லை நாங்கள் என்ன செய்வது என்று.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு

1 கைப்பிடி கல் உப்பு எடுத்து வாராகியின் பெயரைச் சொல்லி திருஷ்டி கழித்து தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். வெண்கடுகு இல்லாதவர்கள் கல்லுப்பை வைத்து திருஷ்டி கழித்துக் கொள்ளலாம். வாராகியை மனதார நினைத்து மேல் சொன்ன எளிய பரிகாரத்தை இன்று தூங்கும் போது செய்யுங்கள். உங்கள் குடும்பம் வாராகியின் பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும். இந்த எளிமையான பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்