வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை விரட்டியடிக்க பரிகாரம்

kethu
- Advertisement -

நம்முடைய வீட்டில் குப்பைகளை சேர்த்து வைக்கக் கூடாது. நம் மனதிலும் குப்பைகளை சேர்த்து வைக்கக் கூடாது. எந்த இடத்தில் எல்லாம் குப்பைகள் என்னும் கழிவு நிறைந்து இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் நெகட்டிவ் எனர்ஜி நிறைந்து இருக்கும். பிரச்சனைகளும் ஓயவே ஓயாது. நம்முடைய கழிவுகளை எல்லாம் வெளியேற்றக் கூடிய இடம்தான் இந்த கழிவறை.

ஒரு காலத்தில் இந்த கழிவறை வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக கொள்ளை பக்கத்தில் தான் இருந்து வந்தது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அது வீட்டிற்குள் வந்து இன்று படுக்கையறைக்குள்ளேயே கழிவறை வந்துவிட்டது. வீட்டிற்குள் எப்படி பிரச்சினைகள் ஓயும். உங்களுடைய வீட்டிற்க்குள்ளேயே கழிவறை இருக்குதா. இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால், வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கலாம்.

- Advertisement -

உடம்பில் இருக்கும் கழிவறையை வெளியேற்றக் கூடிய கிரகம் கேது. நம் உடம்பில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஆசன வாயை கேது என்று ஜோதிடத்தில் சொல்கிறார்கள். உடம்பில் உள்ள கழுவி வெளியேற்றும் வேலையை அதுதானே செய்கிறது. இந்த கழிவுகளை வெளியேற்றும் டாய்லெட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை நீக்க வேண்டும் என்றால் கழிவறையில் கட்டாயம் ஒரு சின்ன பவுலில் கல்லுப்பு வைக்க வேண்டும்.

உங்களுடைய பாத்ரூமில் கழிவறையில் தரைப்பகுதியிலேயே ஒரு ஓரமாக ஒரு சின்ன கிண்ணத்தில், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி கரைத்து விட்டு மீண்டும் புது உப்பை வைக்க வேண்டும். கழிவறையில் இருந்து வெளியேறும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் இந்த கல்லுப்பு தன்னுள்ளே ஈர்த்துக் கொள்ளும்.

- Advertisement -

இதனால் வீட்டில் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இது பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப சின்ன விஷயமாகத்தான் தெரியும். ஆனால் உங்களுடைய வீட்டில் இருக்கும் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் சுலபமான தீர்வை கொடுக்க கூடிய ஒரு பரிகாரம் இது.

இந்த பரிகாரத்தை படித்த பின்பு எல்லோரும் கல்லுப்பை கழிவறையில் வைப்போம். ஆனால் அதை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற மறந்து விடுவோம். பழைய உப்பு அதே இடத்தில் இருந்தால், அதனுடைய நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாறிவிடும். நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்து வைத்திருக்கும் கல்லுப்பை தண்ணீரில் கொட்டி கரைக்காமல் விட்டுவிட்டால் அது இன்னும் கொஞ்சம் பிரச்சனைகளை நமக்கு கொடுத்து விடும்.

- Advertisement -

அதனிடம் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி நம் வீட்டிற்குள்ளேயே சுற்றும். கல் உப்பை நம்பிக்கையோடு வையுங்கள். அந்த கல்லுப்பை மாற்ற மறக்கவே கூடாது. கழிவறையை பொதுவாக தினம் தினம் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். கொல்லைப்புறத்தில் இருக்கும் கழிவறையையே தினம் தினம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போ வீட்டுக்குள் இருக்கும் கழிவறையை நீங்கள் எப்படி சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரம் கிடைக்க அம்பாள் வழிபாடு

நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் தொடங்கக்கூடிய இடமே அது தான். ஆகவே சமையலறை பூஜை அறைக்கு செலுத்தக்கூடிய கவனத்தை, கழிவறையிலும் கொஞ்சம் செலுத்துங்கள். நல்லது நடக்கும். ஒட்டுமொத்த கர்ம கழிவுகளையும் கரைப்பதற்கு இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -