கண்ணுக்கு கீழே இருக்கும் கடுமையான கருவளையமும் 7 நாட்களில் காணாமல் போக உதவும் 2 பொருள்

yogurt-manjal-karuvalayam
- Advertisement -

கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. சரியான தூக்கமின்மையும், பணி சுமையும் இதற்கு முதன்மையான காரணங்களாக இருந்தாலும், கருவளையம் உண்டாவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றது. முகத்தை பொலிவிழக்க செய்யக்கூடிய இந்த கருவளையத்தை 7 நாட்களில் விரட்டி அடிப்பதற்கு இந்த 2 பொருட்கள் எந்த வகையில் நமக்கு உதவப் போகிறது? அப்படின்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த அழகு குறிப்பு பதிவை படிப்போம்.

நம் முகத்தில் மற்ற இடங்களில் இருக்கக்கூடிய தோலின் தடிமனும், கண்ணுக்கு கீழே இருக்கும் பகுதியில் உள்ள தோலின் தடிமனும் நாலில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது. இதனால் தான் முதலில் முகத்தை பாதிப்பது கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி தான். இந்த இடம் கருப்பாக மாறுகிறது என்றால் உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்பது அர்த்தம் ஆகும்.

- Advertisement -

உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் எந்த அளவிற்கு உங்களுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். உங்களுக்கே புரியும். ஓய்வு பற்றாக்குறை காரணமாக முதலில் கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய தோல் ஆனது பாதிப்படைகிறது. கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

சில சத்துக்கள் குறைவதால் கூட முகத்தில் கருவளையம் தோன்றுகிறது. ஜெனிடிக் காரணமாகவும் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு இந்த கருவளையம் வருகிறது. அது போல முகத்தில் செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது இந்த மெல்லிய தோல் பகுதிக்கு ஒத்துக்கொள்வது இல்லை! இதனாலும் கருவளையம் தோன்றுகிறது. சரி, இப்பொழுது மெல்லிய தோலில் ஏற்பட்ட இந்த கருவளையத்தை எப்படி விரட்டி அடிக்கலாம்? ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு யோகர்ட் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்டை கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியை சுற்றிலும் நன்கு அடர்த்தியாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோல தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 7 நாட்களில் நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். கருவளையம் மறைய தோன்றுவதை நீங்கள் பார்க்கலாம். அதே போல தொடர்ந்து ஒரு மாதம் நீங்கள் செய்து வந்தால் கருவளையம் முற்றிலுமாக இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். 1 நிமிடத்தில் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றி விடலாம்.

மேலும் அதற்காக ஓய்வு கொடுக்காமலும் இருக்கக் கூடாது. உடலுக்கு ஓய்வும், இந்த மருத்துவமும் கொடுக்கும் பொழுது தான் கருவளையம் முற்றிலுமாக மறையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். யோகர்ட் எனப்படுவது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு விதமான பொருள் தான். இது தயிர் கிடையாது! தயிருக்கும் இதற்கும் சிறு வேறுபாடு உள்ளது. உடல் எடையை குறைப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த யோகர்ட் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இதில் ஏராளமான விட்டமின்கள் நிரம்பி உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி12 போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. மஞ்சளுடன் யோகர்ட் சேரும் பொழுது கருவளையம் முற்றிலுமாக எளிதாக மறைகிறது.

- Advertisement -