குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். 1 நிமிடத்தில் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றி விடலாம்.

hair4
- Advertisement -

உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக மாற்றக்கூடிய ஒரு எளிமையான அழகு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்பை பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் எந்த ஒரு பக்க விளைவும் வராது. ஆனால் இந்த குறிப்பை பயன்படுத்தினால், நிரந்தரமாக வெள்ளை முடி எல்லாம் கருப்பாக மாறாது. உடனடியா இன்னைக்கு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியே ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும். ஹேர் டை அடிக்க நேரமில்லை. என்ன செய்வது குளித்து முடித்துவிட்டு தயார் ஆவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு இந்த டையை எடுத்து தலையில் பூசினால், நரைமுடி அனைத்தும் அழகாக இயற்கையாக கருப்பாக மாறிவிடும். வெள்ளை முடியை டக்குன்னு கருப்பாக்கக்கூடிய இவ்வளவு அழகான, அழகு குறிப்பு யாருக்குத்தான் பிடிக்காது. வாங்க நாமும் அந்த அழகான அழகு குறிப்பை தெரிஞ்சுக்கலாம்.

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் பூண்டு தோல்:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பூண்டு தோல். சமையலுக்குப் பூண்டு தோல் உரிப்போம் அல்லவா. அந்த தோலை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைப்பிடி அளவு பூண்டு தோல் நமக்கு கிடைத்தால் போதுமானது. சேகரித்த பூண்டு தோலை ஒரு ஈரம் இல்லாத கடாயில் போட்டு வறுக்க வேண்டும். பூண்டு தோல் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து, கருப்பு நிறத்திற்கு மாறும் வரை கருக கருக வறுத்து, அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆரட்டும்.

- Advertisement -

பிறகு வறுத்தப்பூண்டு தோலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் கருப்பு நிறத்தில் பொடி நமக்கு கிடைக்கும். இதை சலிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நைசாகவே அரை பட்டு கிடைக்கும். இந்த கருப்பு நிற பூண்டு பொடியை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான ஹேர் டை பவுடர் தயார்.

ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு ஹேர் டை பொடியை போட்டு, கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து இதை அப்படியே தலைமுடிக்கு மேல் அப்ளை செய்தால் வெள்ளை முடி எல்லாம் கருப்பாக மாறிவிடும். சில பேருக்கு தலைக்கு குளித்துவிட்டு எண்ணெய் இல்லாத தலையில் வெளியில் போகத்தான் பிடிக்கும். அப்படி என்றால் இந்த ஹேர் டை பொடியோடு, அதாவது பூண்டு தோல் பொடியோடு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து அதை அப்படியே வெள்ளை முடிக்கு மேலே தடவி விட்டு, ஒரு சீப்பை வைத்து நன்றாக வாரி விடுங்கள்.

- Advertisement -

எல்லா இடத்திலும் இந்த ஹேர் டை பரவலாகி, வெள்ளை முடி எல்லாம் கருப்பாக மாறியிருக்கும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் ஃபேன் காற்றிலேயே காய வைத்தால் டை காய்ந்து விடும். அதன் பிறகு எப்போதும் போல நீங்கள் தலையை வாரிக் கொண்டு வெளியே கிளம்பலாம்.

இதையும் படிக்கலாமே: ரைஸ் வாட்டரை இந்த பொருளுடன் சேர்த்து யூஸ் பண்ணி இருக்கீங்களா? இதுவரைக்கும் பண்ணலைன்னா இப்ப ட்ரை பண்ணி பாருங்க. இவ்வளவு வெள்ளையா கூட ஆக முடியுமான்னு ஆச்சரியப்படுவீங்க.

ஆனால் வீட்டிற்கு வந்து மறுபடியும் தலைக்கு குளித்தால் இந்த டை போய்விடும். மீண்டும் நரை முடி வரத்தான் செய்யும். இந்த ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் நிரந்தரமாக வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியாது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம். பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு நாளைக்கு மட்டும் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இந்த குறிப்பு உங்களுக்கு எப்பவாவது தேவை என்றால் முயற்சி செய்து பாருங்கள். பாட்டிலில் இருக்கும் அந்த பூண்டு பொடி எத்தனை நாட்களுக்கு வேண்டும் என்றாலும் கெட்டுப் போகாது. ஈரம் படாமல் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -