ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்க இந்த பொருட்களை ஒருமுறையேனும் தானம் கொடுத்து விடுங்கள். செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி மறுஜென்மம் இல்லாமல் சொர்க்கத்தை அடையலாம்.

dhanam
- Advertisement -

நாம் செய்த பாவத்தை கழிப்பதற்காக தான் மனிதப் பிறவியை எடுத்து இருக்கின்றோம். எந்த ஜென்மத்தில் எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இத்தனை கஷ்டங்கள். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு. எப்போது தான் நமக்கு பாவ விமோசனம் கிடைத்து சொர்க்கத்தை அடைவோம் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறந்த பதிலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் செய்த அத்தனை பாவங்களையும் இந்த ஒரு ஜென்மத்தில் கழிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இருப்பினும் செய்த பாவங்களுக்கான தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றால் எந்த பொருட்களையெல்லாம் எப்படி தானம் கொடுக்க வேண்டும் தெரிந்து கொள்வோமா.

crow-food

செய்யக்கூடிய தானத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு சாஸ்திர ரீதியாக ஒரு குறிப்பையும் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. சுப காரியங்கள் எதுவும் வீட்டில் நடக்கவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் காகத்திற்கு உப்பு போடாமல் சாதம் வையுங்கள். சாதம் வைத்து கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில் குடிப்பதற்கு தண்ணீரையும் வைத்து விடுங்கள். இப்படி செய்து வர வீட்டில் சுப காரிய தடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பாவங்கள் நீங்க 9 அமாவாசை தினத்தில் நீங்கள் இந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். இந்த பொருட்கள் அத்தனையும் ஒட்டு மொத்தமாக வாங்கி தானம் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாதம் ஒருமுறை உங்களால் எந்த பொருளை வாங்கி தானம் கொடுக்க முடியுமோ அந்த பொருளை வாங்கி மனதார தானம் கொடுத்து விடுங்கள்.

dhanam

குடை, செருப்பு, வயதானவர்கள் பயன்படுத்தும் தடி, கம்பளிப் போர்வை, வஸ்திரதான தானம், வெள்ளிப் பொருட்கள் தானமாகக் கொடுப்பது, அபிஷேக பாத்திரத்தை வாங்கி கோவிலுக்கு தானம் கொடுப்பது, நல்ல புத்தகங்களை வாங்கி தானம் கொடுப்பது, இந்த பொருட்களை தான் அமாவாசை தினத்தில் நீங்கள் தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கக்கூடிய புத்தகங்களை வாங்கி தானம் கொடுக்கலாம். வயது முதியவர்களுக்கு ஆன்மீக ரீதியான புத்தகங்களை வாங்கி தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் ராமாயணம் மகாபாரதம் என்று இதிகாசம் புத்தகங்களை வாங்கி பிறருக்கு தானமாக கொடுக்கலாம்.

annadhanam 1

இதேபோல் கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பித்தளை பாத்திரங்களை வாங்கி தானம் கொடுப்பது மிக மிக சிறப்பான ஒரு விஷயம். அடுத்தபடியாக வெள்ளிப் பொருட்கள் என்றால் சிறிய அளவில் இருக்கும் வெள்ளி மோதிரம் போன்றவற்றை வாங்கி தானம் கொடுப்பதும் நமக்கு நன்மையை கொடுக்கக்கூடியது.

vasthira-dhanam1

இந்த பொருட்களை எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்கள், உங்க சொந்த காரங்களுக்கு தானம் கொடுப்பதை விட, உங்களுக்கு தெரியாதவர்கள் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வாங்கி தானம் கொடுப்பது மிக மிக சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது அமாவாசை தினங்களில் இதில் உங்களால் எந்த பொருளை வாங்கி கொடுக்க முடியுமோ உங்கள் தகுதிக்கு ஏற்ப அந்த பொருளை வாங்கி தானம் கொடுத்தாலே போதும். வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -