வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யும் முறை

face bleaching
- Advertisement -

எந்த நிறத்தில் இருந்தாலும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் நினைப்போம். அதிலும் குறிப்பாக நம்முடைய முகம் பளிச்சென்று இருந்தால் நமக்கு ஒருவித புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடும். பளிச்சென்று இருப்பதற்காக பலரும் பியூட்டி பார்லர் போய் ப்ளீச்சிங் செய்கிறார்கள். பியூட்டி பார்லருக்கு போகும் பொழுது அங்கு கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ரூபத்திலாவது கெமிக்கலை முகத்தில் தடவி விடுவார்கள். அந்த கெமிக்கலை தவிப்பதற்கு வீட்டிலேயே மிகவும் எளிமையான பொருட்களை வைத்து ப்ளீச்சிங் எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ப்ளீச்சிங் என்பது நம் முகத்தின் சருமத்துளைகளில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கும் செயலாகவே கருதப்படுகிறது. அதனால் தான் பொதுவாக ஒரு வாரம் வெயிலில் அலைந்தோம் என்றாலே நம் முகம் கருத்து விடும். மேலும் சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக மாசுகள் அதிகமாக வந்து முகத்தில் தங்கிவிடும். இதை நாம் என்னதான் தண்ணீர் ஊற்றி கழுவினாலும் முகத்துவாரங்களுக்குள் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்குவது என்பது கடினமாகவே இருக்கும்.

- Advertisement -

அந்த சமயத்தில் ப்ளீச்சிங் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அந்த அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் இறந்த செல்களையும் நீக்கி புது செல்களை உருவாக்கி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் ஏதாவது ஒரு விசேஷத்துக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட ஆண்களும் பெண்களும் மேக்கப் போடவில்லை என்றாலும் ப்ளீச்சிங் மட்டும் செய்து கொண்டு வருவோம் என்று பார்லருக்கு போவார்கள். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து பார்லருக்கு போனதை விட அதிகமான பிரகாசத்தை நம்மால் பெற முடியும்.

இதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் உருளைக்கிழங்கும், அரிசி மாவும் தான். ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை சீவி விட்டு பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். நன்றாக அரைத்த பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி உருளைக்கிழங்கின் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு சுத்தமான பவுலை எடுத்து இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவை சேர்க்க வேண்டும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உருளைக்கிழங்கு சாறை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது முகத்தை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட்டை நம்முடைய முகம், கழுத்து பகுதிகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

விருப்பம் இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக பேஸ்ட்டை செய்து தங்களுடைய கைகளிலும் தடவிக் கொள்ளலாம். பிறகு இதை வட்ட வடிவில் நன்றாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் லேசாக தண்ணீரை தெளித்து ஒரு உறை மசாஜ் செய்து கழுவி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் அருமையான ப்ளீச்சிங்கை நாமே நம் வீட்டில் செய்து முடித்து இருப்போம்.

இதையும் படிக்கலாமே: கண் கருவளையம் நீங்கி பிரகாசமான கண்கள் பெற

இதை வாரத்திற்கு ஒருமுறை நேரம் கிடைக்கும் பொழுது செய்து வந்தோம் என்றால் நம் முகத்தில் எந்தவித கறைகளும் இல்லாமல் முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

- Advertisement -