பார்லருக்கு எல்லாம் போக முடியவில்லை! 15 நிமிடத்தில் பேசியல் செய்தது போல முகம் பிரகாசமாக மாற எளிமையாக என்ன செய்யலாம்?

curd-face-pack_tamil
- Advertisement -

ஏதாவது ஒரு நல்ல நாள், விசேஷம் என்று சொல்லும் பொழுது எல்லோரும் பேசியல் செய்து கொள்வது வழக்கம். அது போல பார்லருக்கு சென்று அதிக விலை கொடுத்து பேசியல் செய்து கொள்வார்கள். இயற்கையான முறையில் நம்ம வீட்டிலேயே எப்படி 15 நிமிடத்தில் சூப்பராக தயாராகலாம்? பார்லருக்கு சென்றால் கூட கிடைக்காத இந்த பிரகாசமான முகம் என்ன செய்தால் கிடைக்கப் போகிறது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிடைக்கக் கூடிய இந்த பிரகாசம், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எப்படி அடைவது? இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து கொள்ளுங்கள். நன்கு கொதிக்கும் நீரில், ஒரு ஐந்து நிமிடம் ஆவி பிடித்துக் கொள்ளுங்கள். முகம் முழுவதும் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்கள் மூலம் நீர் வெளியேற ஆரம்பிக்கும். அதன் மூலம் இறந்த செல்கள், அழுக்குகள், நுண் கிருமிகள் போன்றவை செத்து மடிந்து வெளியில் வந்து விடும். அதன் பிறகு ஒரு மெல்லிய துணியால் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் புளித்த தயிராக இருக்கக் கூடாது. கெட்டியான பிரஷ் ஆன தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அதே அளவிற்கு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இது சிறந்த ஒரு மாய்ஸ்ரைசராக இருக்கும். சரும துளைகளுக்குள் சென்று டீப் கிளீன் செய்து, துவாரங்களை இறுக செய்து சுருக்கங்கள் இல்லாமல் பொலிவுடன் வைத்துக் கொள்ளும்.

இப்பொழுது இந்த பேஸ்டை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி நன்கு உலர விட்டுக் கொள்ளுங்கள். 90 சதவீதம் நன்கு உலர்ந்ததும் தண்ணீரைத் தொட்டு கீழிருந்து மேலாக கழுத்து பகுதிகளில் மசாஜ் செய்து வாருங்கள். ஒரு ரெண்டு நிமிடம் இது போல செய்ததும், முகம் முழுக்க அதே போல கீழிருந்து மேல் புறமாக மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

மசாஜ் செய்யும் பொழுது உலர்ந்தது மீண்டும் ஈரப்பதம் ஆகும். பின்னர் முகத்தை ஒரு மெல்லிய துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது போல ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்து இருக்க வேண்டும். பிறகு முகத்தை துடைத்து எடுத்ததும், குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
செலவே இல்லாமல், இந்த ஸ்க்ரப்பரை போட்டு குளிப்பதால் தான் சினிமா நடிகைகள் இத்தனை அழகாக ஜொலிக்கிறாங்களா? இந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால் நாமும் சினிமா நடிகைகளை போல பேரழகியாக மாறலாமே.

அவ்வளவுதான், இப்பொழுது பேசியல் செய்ததை விட, சூப்பரான பளிச்சுன்னு முகம் பொலிவுடன் இருக்கும். இதன் பிறகு நீங்கள் வழக்கம் போல என்ன மேக்கப் செய்ய வேண்டுமோ, அதை செய்து கொள்ளலாம். ரொம்ப சூப்பரான ரிசல்ட்டை கொடுக்கக்கூடிய இந்த எளிமையான டிப்ஸ் வீட்டிலேயே நமக்கு நாமே யார் துணையும் இல்லாமல் செய்யக்கூடியது. எனவே இனி பார்லருக்கு போக முடியாவிட்டாலும், இது போல செய்து கொண்டால் என்றுமே இயற்கையான பொலிவுடன் இருக்கலாம்.

- Advertisement -