கருப்பாக இருப்பதாக கவலைப் படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். இந்தக் குளியல் பவுடர் போதும். உங்கள் நிறம் நிச்சயம் மாறும்.

betroot face
- Advertisement -

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நிறம் கருப்பு தான். ஆனால் பெண்கள் தாங்கள் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கவே ஆசை படுவார்கள். எனவேதான் கருப்பாக இருக்கும் சில பெண்கள் கொஞ்சம் மனக்கவலயுடன் இருப்பார்கள். நீங்கள் பிறக்கும் பொழுதிலிருந்தே உள்ள நிறத்தினை முழுவதுமாக மாற்றுவது என்பது முடியாது. ஆனால் இயற்கையான முறையில் சில விஷயங்களை பின்பற்றினோம் என்றால் அது நமது உடலில் உள்ள மூலப் பொருள்களுக்கு ஊட்டச்சத்து அளித்து உங்கள் நிறத்தினை சற்று மாற்ற உதவும். இதற்கு உங்கள் வீட்டில் நீங்கள் சமைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு அற்புத காய்கறி மட்டுமே போதும்.

face-skin

கருப்பாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும் உடலில் சில இடங்கள் இரண்டு விதமான நிறங்களில் இருக்கும். கழுத்தின் பின்புறம் மற்றும் கையில் நீங்கள் ஆடை அணிந்து இருக்கும் இடத்தினை தவிர மற்ற இடங்கள் வெயிலில் நேரடியாக படுவதால் அந்த இடங்கள் மட்டும் நமது இயற்கையான நிறத்தை விட சற்று கருப்பாக தான் இருக்கும். இவ்வாறு உள்ள பிரச்சனையை சரி செய்வதற்கு இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் முகத்திற்கு ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இதற்காக நமக்குத் தேவைப்படும் முக்கிய பொருள் பீட்ரூட். பீட்ரூட்டில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலுக்கு மிகுந்த ஊட்டச்சத்து கொடுக்கிறது. உங்களது சருமம் பொலிவுடன் இருக்க துணை புரிகிறது. பீட்ரூட் ஜூஸ் மட்டும் குடித்தோம் என்றாலும் கூட உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும். இவ்வாறு பீட்ரூட்டை ஜூஸ் ஆகவும், உணவில் சேர்த்தும், அல்லது இப்பொழுது நாம் செய்யவிருக்கும் குளியல் பவுடராகவும் எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் நிறம் மாறுவதற்கு இது நல்ல பலனளிக்கும்.

Beetroot Juice

பீட்ரூட் குளியல் பவுடர் தயார் செய்யும் முறை:
கால் கிலோ பீட்ரூட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைக் கழுவி அதன் மேல் உள்ள தோலினை ஒரு பீலர் வைத்து சீவிக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய பீட்ரூட்டினை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி அரைத்து எடுத்த இந்த பீட்ரூட் விழுதினை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வடிகட்டி வைத்த பீட்ரூட் சாறினை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து சுண்டி வரும் வரை அப்படியே விட வேண்டும். பீட்ரூட் சாறு நீங்கள் ஊற்றும் பொழுது இருந்த தண்ணீர் பதத்தை விட சற்று கெட்டி பதத்திற்கு வந்துவிடும். அப்போது கையில் தொட்டு பார்த்தீர்கள் என்றால் மிகவும் சிவப்பு நிறமாக இருக்கும். இந்த பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

betroot

இந்த பீட்ரூட் சாறு சற்று சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் அரிசி மாவு சேர்த்து கிளறவேண்டும். அரிசி மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொண்டு வரவேண்டும். ஒரு பவுடர் பதம்(திரி திரியாக) வரும் வரையில் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். அரிசி மாவினை நீங்கள் இதனுடன் சேர்ப்பதால் உங்களுக்கு பலன் கண்டிப்பாக கிடைக்கும். இயற்கையாகவே அரிசி மாவினை ஸ்க்ரப்பர் போல் பயன்படுத்தலாம். அதன் சொரசொரப்பு தன்மை உங்கள் தோலில் உள்ள கண்ணுக்கே தெரியாத அழுக்குகளையும், தேவையற்ற கிருமிகளையும் வெளியில் எடுக்கும் திறன் படைத்தது.

betroot

பீட்ரூட் குளியல் பவுடரை பயன்படுத்தும் முறை:
2 ஸ்பூன் பீட்ரூட் குளியல் பவுடருடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், சிறிதளவு பச்சை பயறு மாவு, சிறிதளவு கடலைமாவு சேர்த்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த குளியல் பவுடரை நன்றாக தேய்த்து விட்டு பின்னர் குளிக்க வேண்டும்.

கடலை மாவு, பச்சைப்பயிறு மாவு இல்லாவிட்டாலும் வெறும் கஸ்தூரி மஞ்சள் மட்டும் சேர்த்தும் இல்லை என்றால் பீட் ரூட் பவுடர் மட்டும் வைத்தும் குளித்து வந்தாலும் கூட உங்கள் தோலின் நிறத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். உங்கள் சருமத்தின் நிறம் நல்ல பொலிவுடன் இருக்கும்.

- Advertisement -