முகம் பிரகாசமாக ஃபேஸ் பேக்

glowing skin
- Advertisement -

நான் சிறு வயதில் எவ்வளவு நிறமாக இருந்தேன் தெரியுமா? இப்பொழுது தான் கருத்துப் போய் விட்டேன் என்று புலம்புபவர்கள் பலர் இருப்பார்கள். இதே போல் சில தாய்மார்கள் நீ சிறுவயதில் இருக்கும் போது நல்ல நிறமாக இருந்தாய் வளர வளர ஒழுங்காக குளிக்காமல் கருத்துப் போய்விட்டாய் என்று பிள்ளைகளை திட்டுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி நிறமாக இருந்து கருத்து விட்டார்கள் என்று கவலைப்படுபவர்கள் தங்களுடைய நிறத்தை திரும்ப கொண்டு வரவும் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளவும் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வீட்டிலேயே நாமே தயார் செய்யும் ஃபேஸ் பேக் என்பது முற்றிலும் ஆரோக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதனால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அதனால் தாராளமாக இதை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஆண்கள் பெண்கள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

பொதுவாக நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் வீட்டில் நாம் உண்பதற்கு உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்தே தங்களுடைய சருமத்தை அழகாக பார்த்துக் கொண்டனர். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் பொருள்தான் உளுந்து. உளுந்தை நாம் நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமை நிறம் என்பது முற்றிலுமாக நீங்கி முகத்திற்கு ஒரு வித பிரகாசத்தை தரும்.

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவு உளுந்தை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து அந்த ஊறிய உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதிலிருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு மட்டும் எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்த பிறகு இதை முகத்தில் போடுவதற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் தொடைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து, கைகளில் தடவி நன்றாக அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். அவ்வளவுதான் ஒரு முறை நீங்கள் பயன்படுத்தினாலே உங்கள் முகம் பிரகாசமாகவும் மிருதுவாகவும் தெரிவதை உங்களால் உணர முடியும். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உபயோகப்படுத்தும் பொழுது நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: முடியை வலுவாக்கும் தேங்காய் எண்ணெய்

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் ஃபேஸ் பேக் தயார் செய்து இயற்கையான அழகை பாதுகாப்போம்.

- Advertisement -