எதையெல்லாம் பின்பற்றினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது தெரியுமா?

pillaiyar-happy

எல்லாரிடமும் அன்பாக இருப்பது சற்று கடினமான காரியம் தான். ஆனாலும் விலையில்லாத இந்த அன்பை செலுத்த செலுத்த மனம் தூய்மையடைவதை உங்களால் உணர முடியும். உங்களை சுற்றி பல உறவுகள் சூழ்ந்து எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது பதிந்திருக்கும். எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து உங்களுக்கு குறைவற்ற செல்வத்தையும் வாரி வழங்குவார். நமக்காக வேண்டபடும் வேண்டுதல்களை விட பிறருக்காக மனதார வேண்டபடும் வேண்டுதல்கள் பல மடங்கு பலனளிக்கும். நீங்கள் செலுத்தும் அன்பு சிறுக சிறுக சேர்ந்து விருட்சமாக வளர்ந்து நிற்கும் போது அன்பின் மகத்துவம் கண்களில் கடலாக பெருக்கெடுக்கும்.

friendship

அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் நட்பை விட ஒரு சிறந்த உறவு உலகத்தில் இருக்க முடியாது. எனவே எல்லோரிடமும் நட்பு பாராட்டுவது மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு தாத்பரியம் ஆகும். இணைந்த கைகள் தான் பலம் கொள்ளும். இந்த புனிதமான நட்பு தான் வாழ்வை வெற்றி கொள்ள செய்யும். பகை உணர்வு கொள்வதால் எந்த பலனுமில்லை. நட்புடன் நட்புணர்வு கொள்வதால் ஆயிரமாயிரம் பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பது உங்களுக்கே தெரியும். ஆயிரம் புத்தகங்கள் படிப்பதை காட்டிலும் ஒரு நல்ல நட்பை பெறுவதில் பலன் அதிகம் உள்ளது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நட்புடன் பழகி பாருங்கள்.

இறைவனிடம் ஒவ்வொருவரும் கையேந்தி நிற்கிறார்கள். அதை மனிதன் செய்ய நேரிட்டால் அவனே இறைவன் ஆவான். செய்யமுடியாத நிலையில் இறைவனை நாடுவதில் தவறில்லை ஆனால் ஒரு சில விஷயங்கள் நம்மால் பிறருக்கு செய்ய முடியும். இருப்பினும் சுயநல கண்ணோடு அணுகும் போது அதை நாம் உணர்வதில்லை. அவர்களுக்கு தேவையானவற்றை நாம் செய்து விட்டால் நாம் அவர்கள் கண்களுக்கு கடவுளாக தெரிவோம். நம் தகுதியை அந்த அளவிற்கு நாம் உயர்த்திக் கொண்டோமேயானால் நம் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது அல்லவா? ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால் நம்மிடம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

women

ஒருவர் நமக்கு தீங்கு செய்தாலும் அவரை மனதார மன்னிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மனம் தூய்மை அடைகிறது. உள்ளம் தெளிவு பெறுகிறது. ஒரு சிலரை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களிடம் நாம் சரிக்கு சமமாக நிற்பதில் பலன் இல்லை. அவர்களை விடுத்து நாம் ஒதுங்கி இருப்பதே நல்லது. எத்தகைய தவறு செய்தாலும் அவரை கடவுள் பார்த்துக் கொள்வார் அல்லது அவருக்கான சூழ்நிலை வரும் பொழுது அவரே புரிந்து கொள்வார் என்று விட்டுவிட்டு அவர் நன்றாக இருக்கவே வாழ்த்தி விட்டுப் போங்கள். அவர் இதை நமக்கு செய்து விட்டாரே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் தான் நமக்கு நிம்மதி இருக்காது. அவர் பாவத்தை சேர்த்துக் கொள்கிறார் என்று கருணை காட்டி விடுங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி குடிகொண்டு விடும்.

- Advertisement -

இவற்றையெல்லாம் பின்பற்றுவது சற்று கடினமான காரியம் தான். ஆனால் இதை செய்ய முயற்சி செய்து விட்டால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்துவிடும். மனதில் எந்தவித சலனமும் இல்லாமல் எப்போதும் இன்முகத்துடன் சந்தோஷமாக மகிழ்ச்சியாக நம்மால் இறை நெறியில் முழு கவனத்துடன் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே
எதையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Facts about happiness Tamil. Points about happiness Tamil. Happiness as a fact of life Tamil. True facts about happiness Tamil.