பிப்ரவரி மாத ராசி பலன்கள் – 2020

feb-month-rasi-palan

மேஷம்

Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் பல சங்கடமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு போராடும் ஒரு மாதமாக இருக்கும். உங்களிடமிருந்து பயம் நீங்கி தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். நண்பர்களின் உதவி தகுந்த சமயத்தில் கிடைக்கப்பெறும். உங்களின் பிரச்சினைகளுக்கு நீங்களே காரணகர்த்தாவாக அமைந்து விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். மன நிம்மதி கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உடல்நலனில் சிறிது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் அப்போது ஏற்பட்டு மறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஹயக்ரீவர்

பரிகாரம்: சனிக்கிழமையில் அபிஷேகம் செய்யலாம்.

ரிஷபம்

Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய மாதம் முழுவதும் நல்ல பலன்களை தரக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்வு கிட்டும். பணியிட மாற்றம் கோரி விண்ணப்பதோருக்கு சாதகமான பலன் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகும். பயணங்களால் ஆதாயம் கிட்டும் என்பதால் தைரியமாக பயணம் மேற்கொள்ளலாம். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். எனினும் பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் இந்த மாதத்திற்குள் வெற்றி கிட்டும். தம்பதியருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

- Advertisement -

வழிபட வேண்டிய தெய்வம்: லக்ஷ்மி நரசிம்மர்

பரிகாரம்: துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

மிதுனம்

midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய மாதம் முழுவதும் இயல்பான ஒரு மாதமாகவே அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வழக்கம் போல் தங்களுடைய அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி மென்மேலும் தங்களை மெருகேற்றிக் கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சில உத்திகளைக் கையாள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை ஏற்றமாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள் இம்மாதத்தில் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் இருப்பீர்கள். கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படும். கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: கற்பக விநாயகரை தினமும் வழிபடுவது சிறப்பானது. குழந்தைகளின் கல்விக்கு சிறிய உதவி செய்யலாம்.

கடகம்

Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் தேவையற்ற விரயங்களை மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் வீண் செலவுகள் செய்த பின் இந்த செலவுகளை தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் மேலிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலைபளு காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். அதிக ஆர்வம் கொண்டு படிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிய தொழில் வாய்ப்புகள் வெற்றி தரும். கூட்டுத் தொழில் முயற்சிகள் பிரச்சனையின்றி நடந்தேறும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வ மிகுதி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் கிட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: வாரா வாரம் அம்பாளை வழிபடுவது நல்லது. உங்களால் முடிந்த அளவிற்கு நெய் தானம் செய்யலாம்.

சிம்மம்

simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள நேரிடும். அதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு, வாகன யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் சில தடங்கல்கள் வந்து மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஹனுமார்

பரிகாரம்: சனிக்கிழமைகளில் துளசி மாலை சாற்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெபிப்பது பலன் தரும்.

கன்னி

Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் ஒரு இனிய மாதமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும். வெளிநாடு வேலைவாய்ப்புகள் குறித்து விண்ணப்பித்தோர்க்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலர் சமூக அக்கறையுடன் செயல்பட வாய்ப்புகள் உண்டு. திடீரென சமூகத்தின் மீது ஒரு அக்கறை உருவாகக்கூடும். இரக்க குணம் மிக்கவர்களான நீங்கள் மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேருவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முதியவர்களுக்கு உணவளிப்பது நல்லது.

துலாம்

Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் லாபகரமான மாதமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகி உங்களை குதூகலப்படுத்தும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதற்கான சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை எதிர்நோக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இலாபகரமான மாதமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு பலன் தரும். உறவினர்களின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ள மூத்தவர்களின் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

பரிகாரம்: துளசி அர்ச்சனை செய்யலாம். பசுவிற்கு அகத்தி கீரை கொடுக்கலாம்.

விருச்சிகம்

Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். சக பணியாளர்களினால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் திறமைக்கு உரிய பலன்கள் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டு பின்பே வெற்றி அடையும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. உயர்கல்வி பயில்பவர்கள் புதிய சாதனைகள் புரிவீர்கள். நண்பர்களினால் ஆதாயம் உண்டு. பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. கூட்டுத் தொழில் முயற்சிகளில் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: முருகா சரணம் என்றால் அவரே உங்களை காப்பாற்றுவார். ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தங்கங்கள் தானம் அளிக்கலாம்.

தனுசு

Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்களின் கடின முயற்சியால் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள். உத்தியோகம் செய்பவர்களுக்கு இனிய அனுபவங்கள் கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கப்பெறும். மன நிம்மதியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் அவ்வபோது வந்து மறையும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படும். மாத இறுதியில் எதிர்பாராத தனவரவு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஈசன்

பரிகாரம்: ஈசனை தினமும் துதியுங்கள். அன்னதானம் அளிப்பது நன்மை தரும்.

மகரம்

Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய மாதம் முழுவதும் நல்ல மாதமாக இருக்கும். தொலைதூர பயணங்கள் முன்னேற்றத்தை தரும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். மகான்களின் ஆசீர்வாதம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக சில சங்கடங்கள் உருவாகி மறையும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. சக பணியாளர்களிடம் நட்புறவு கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிட்டும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தரும். திருமணம் தொடர்பான விஷயங்களில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி மென்மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சனி

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.

கும்பம்

Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நிதி பற்றாக்குறையால் சில சங்கடங்கள் உருவாகும். எனினும் ஏதாவது ஒரு வகையில் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய முயற்சிகளை கையாள்வதன் மூலம் வெற்றி காணலாம். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு விரயங்கள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். தாய்வழி உறவினர்கள் வழியே ஆதாயம் கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிக்கை

பரிகாரம்: உங்களின் வசதிக்கேற்ப கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்யலாம்.

மீனம்

Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்கள் திறமைகளை நிரூபிக்கக் கூடிய ஒரு நல்ல மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு தங்களின் கடின முயற்சிக்குரிய தகுந்த பலன் கிட்டும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அதனால் சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை ஏற்றகரமாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல லாபம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பைரவர்

பரிகாரம்: பைரவருக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

English Overview:
Here we have February month Rasi palan 2020 in Tamil or February matha Rasi palangal in Tamil. This February month Rasi palangal covers Mesham to Meenam Rasi.