சிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? எடுக்க எடுக்க பணம் சுரந்துகொண்டே இருக்கணும்ன்னா, இந்த டப்பாவுல பணத்தை போட்டு வைக்கணும்!

money

சில பேரெஎல்லாம், சிறிய வயதிலிருந்தே பணத்தை சேர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். குழந்தையிலிருந்தே கஷ்டத்தை மட்டும் அனுபவித்து வருபவர்கள், நன்றாக உழைப்பார்கள். கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் தனக்கென்று, ஒரு ரூபாய் பணத்தை, எடுத்து வைக்கவே முடியாத அளவிற்கு செலவு வந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு ஏற்படும் சுப செலவாகவும் இருக்கலாம். வீண் விரைய செலவாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், செலவு செலவு தானே! அது நமக்கு நஷ்டம் தான்!

counting-cash

இந்த காசு சேகுரதுல கூட, ஒரு சூட்சுமம் இருக்கு. இதை, யாரும் தப்பா நினைச்சுக்க வேண்டாம். குறிப்பாக வீட்டின் மூத்த வாரிசுகள் பணம் சேர்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அதாவது மூத்த பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், அவர்கள் தங்களுடைய குடும்பத்திற்காகவும், தங்களுடைய சகோதர சகோதரிகளுக்காகவும், தான் சம்பாதிக்கும் பணத்தை செலவழித்து விடுவார்கள். இது சில பேரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனுபவமான உண்மையும் கூட. அதற்காக, இரண்டாவதாக பிறந்தவர்கள், மூன்றாவதாக பிறந்தவர்களை எல்லாம் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. வீட்டிற்கு இரண்டாவது மூன்றாவதாக பிறந்த பிள்ளைகள் கூட குடும்பத்திற்காக செலவு செய்யலாம். இருப்பினும், மூத்தவர்களுக்கு கொஞ்சம் பொறுப்பு அதிகமாக இருக்கும் அல்லவா? அதனால்தான்.

சேமிப்பு இல்லாத வாழ்க்கையை யாருமே வாழக்கூடாது. அந்த கஷ்டம், ஒரு மாதம் வருமானம் இல்லாத போது தான் நமக்கு புரியும். நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து செலவு செய்துவிட்டு, மீதம் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தால், கடைசி வரை சேமிக்க முடியாமல் போய்விடும். ஒரு தொகையை சேமிப்புக்காக எடுத்து வைத்து, மீதம் இருக்கும் தொகையில், உங்களது செலவை அடக்குங்கள். இது தான் புத்திசாலித்தனம். அனேகமாக எல்லோரும் இந்த கொரானா பிரச்சனையில், சேமிப்பின் அவசியத்தை புரிந்திருப்பீர்கள்.

cash

பொதுவாகவே, உங்கள் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆவதற்கு, உங்களுடைய ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருப்பதும் ஒரு காரணம். இது மட்டும் தான் காரணமாக இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. இதுவும் ஒரு காரணம். இதோடு சேர்த்து உங்களுடைய விடா முயற்சியும், உழைப்பும் கட்டாயம் தேவைப்படுகிறது. புதன் ஆசிர்வாதம் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் கஷ்டப்பட்டால்தான் உங்களுக்கு காசு. புதனின் ஆசீர்வாதம் இல்லை என்றாலும், நீங்கள் கொஞ்சம் அதிகமாக கஷ்டப்பட்டால் கைக்கு காசு வரும். கொஞ்சம் செலவாகும். அவ்வளவு தான். புதனோடு ஆசீர்வாதத்தை பெற என்ன செய்யலாம்?

- Advertisement -

புதன்கிழமை தோறும் நவகிரக கோவிலில் இருக்கும் புதன் பகவானை வழிபடுவது நல்ல பலனைத் தரும். புதனுக்கு உரிய பொருளாக சொல்லுவது வெந்தயம். வெந்தயத்தை ஒரு காகிதத்தில் சிறிதளவு போட்டு மடித்து, எப்போதுமே உங்கள் பாக்கெட்டிலோ, உங்கள் பர்ஸ்ஸிலோ வைத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டில் வெந்தயத்தை கொட்டி வைத்திருக்கும் டப்பா கட்டாயம் இருக்கும். அந்த டப்பாவில், புதன் கிழமை, புதன் ஓரையில் உங்களால் முடிந்த பணத்தை சேமித்து வாருங்கள். கடைசி வரைக்கும் அந்த டப்பாவில், பணம் தீராமல் இருந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

vendayam

ஒரு சிறிய பேப்பரில், பணத்தை மடித்து வைத்து, அந்த பணத்தை அந்த வெந்தய டப்பாவில் போட்டு சேமித்து வரலாம். தவறில்லை. நீங்கள், ஆண்களாக இருந்தால் உங்கள் மனைவியிடம் கொடுத்து அந்த டப்பாவில் பணத்தை சேர்க்க சொல்லுங்கள். பெண்களாக இருந்தால் உங்கள் கணவர், உங்கள் கையில் கொடுக்கும் பணத்தை வாங்கி ஒரு பேப்பரில் கட்டி, அந்த டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்.

Venthayam

வெந்தயத்தை கொஞ்சம் பெரியதாக இருக்கும் டப்பாவாக பார்த்து போட்டுக் கொள்ளுங்கள். பணம் வைப்பதற்கு வசதியாக இருக்கும்.  எந்த ஒரு எதிர்மறை சக்தியும் அந்த பணத்தை தாக்காமல் இருக்கும். நீங்கள் நன்றாக சம்பாதித்து நிறைய பணம் சேர்த்தால், தேவையில்லாத கண் திருஷ்டியும், அடுத்தவர்களின் பெருமூச்சும், அந்த பணத்தை தாக்கி இருந்தாலும் கூட, அந்த வெந்தய டப்பாவில் போடும் போது, அதற்கான தோஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்! கையில் இருக்கும் காசு செலவாகாமல் இருக்க, இது ஒரு சின்ன வழி தானே! அனைவரும் சேமித்து பலன் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெரிய பெரிய கஷ்டங்கள் வராமல் இருக்கணும்னா, இந்த சின்ன சின்ன தவறுகளை வாழ்நாள் முழுக்க செய்யாம இருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam athigam vara Tamil. Budan jathagam palan Tamil. Panam eppadi serum.