பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் முறை

pooja vessels
- Advertisement -

பெண்களைப் பொறுத்த வரையில் எப்போதும் சிரமப்பட்டு செய்யும் வேலை என்றால் அது பூஜை பாத்திரங்களை தேய்ப்பது தான். வீட்டில் விளக்கு ஏற்றுவது பூஜை செய்வது எல்லாம் மனதிற்கு பிடித்து செய்தாலும் கூட, பூஜை பாத்திரங்களை தேய்க்கும் போது ஒரு வித சலிப்பு ஏற்படத் தான் செய்யும். பூஜை பாத்திரங்களை பொருத்த வரையில் மற்ற பாத்திரங்களை போல சுலபத்தில் தேய்த்து எடுக்க முடியாது.

அப்படியே தேய்த்து விட்டாலும் தேய்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் கருத்து போய் விடும் அல்லது விளக்கேற்றிய ஒன்று இரண்டு நாட்களுக்குள் நிறம் மாறி விடும். இது ஒரு புறம் என்றால் சில நேரங்களில் தீபம் ஏற்றும் போது விளக்கில் கரிப்பிடித்து எண்ணெய் பிசுக்கு படிந்து விடும். அதை தேய்த்து எடுப்பதற்குள்ளாக பெரும்பாடாகி விடும்.

- Advertisement -

இதனாலேயே மன நிறைவாக செய்ய வேண்டிய ஒரு வேலையை சிரமப்பட்டு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக வேண்டி உள்ளது. இந்த வீட்டு குறிப்பு பதிவில் எண்ணை பிசுக்கு கரி படிந்த பூஜை பாத்திரங்கள் விளக்குகளை சுலபத்தில் சுத்தம் செய்யக் கூடிய ஒரு எளிமையான முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

இந்த முறையில் சுத்தம் செய்வதற்கு முதலில் பூஜை பாத்திரங்களை காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள். குறிப்பாக காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு போன்றவற்றை இந்த முறையில் சுத்தம் செய்வது அவசியம்.

- Advertisement -

அதன் பிறகு சிறிதளவு கோதுமையை மாவை எடுத்து எண்ணெய் பிசுக்கு படிந்த பூஜை பாத்திரங்களின் மீது தூவி அதை காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள். இதன் மூலம் அதில் படித்திருக்கும் கறைகள் எண்ணெய் பிசுக்கள் முழுவதுமாக நீங்கி விடும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் உங்கள் பூஜை பாத்திரங்கள் அளவிற்கு ஏற்றார் போல் எலுமிச்சை சாறு கலந்து விடுங்கள். அத்துடன் நம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு சிறிதளவு கலந்து தண்ணீரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் உங்களுடைய பூஜை பாத்திரங்களை போட்டு வையுங்கள். தண்ணீரில் பத்து நிமிடம் பூஜை பாத்திரங்கள் நன்றாக ஊற வேண்டும்.

- Advertisement -

பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தண்ணீரின் அளவையும் மற்ற பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பத்து நிமிடம் கழித்து ஒரு பிளேட்டில் கொஞ்சம் சபீனா சேர்த்து பிழுந்து விட்டு வைத்த எலுமிச்சை சாறின் தோலை தொட்டு பூஜை பாத்திரங்கள் மீது தேய்த்தால் பளிச்சென்று பாத்திரங்கள் ஜொலிக்கும்.

இப்படி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு ஈரம் இல்லாமல் சுத்தமாக காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் நிழலில் ஆற வைத்து எடுத்து விடுங்கள். இப்போது தேய்த்து சுத்தப்படுத்திய பூஜை பாத்திரங்களின் மீது சிறிதளவு விபூதியை தூவி டிஷ்யூ பேப்பரை வைத்து பாத்திரங்களின் மீது முழுமையாக தேய்த்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூமை சுத்தம் செய்ய புத்தம் புது வீட்டு குறிப்பு

இந்த முறையில் சுத்தம் செய்வதால் இன்னொரு நன்மை என்னவென்று சீக்கிரத்தில் அடுத்த முறை பாத்திரம் கருக்காது. பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் இந்த எளிமையான முறை உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இதே முறையில் முயற்சி செய்து பாருங்கள்

- Advertisement -