ஒரு கைப்பிடி பழைய சாதம் இருந்தால் போதும். உங்கள் முடியை பக்குவமாக பாதுகாப்பாக வளர்க்கலாம்.

hair3
- Advertisement -

உங்கள் முடியை அதிகமாக வறட்சி அடைய விடாமல், வேர்க்கால்களில் ஊட்டச்சத்து குறையாமல், பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்றால், நாம் ஒரு சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். அதில் முதல் விஷயம் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, ப்ரோடீன் சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, இந்த இரண்டு விஷயங்களை முறையாக நாம் பின்பற்றி வந்தாலே, நம்முடைய முடி ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்கும். இது தவிர தலைமுடிக்கு ஊட்டச்சத்துக் கொடுக்க சில ஹேர் பேக்குகளை நாம் பயன்படுத்தலாம். அந்த வரிசையில் பழைய சாதத்தை வைத்து முடியை பாதுகாக்க சூப்பரான சுலபமான ஹேர் பேக் வீட்டில் இருந்தபடியே எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

பழைய சாதத்தில் முடி வளர்ச்சிக்கு ஹேர்பேக் தயார் செய்யும் முறை:
இந்த ஹேர் பேக்குக்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி, அதை மறுநாள் காலை பயன்படுத்தினால் அது பழைய சாதம். இது நம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா. பழைய சாதம் 2 கைப்பிடி அளவு, பழுத்த வாழைப்பழம் 1, முட்டை 2, ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன். இந்த பொருட்கள் எல்லாம் தேவை.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு பழைய சாதத்தை போட்டு, பழுத்த 2 வாழைப்பழத்தை தோலுரித்து, துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு, அந்த பழைய சாதத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றி, நைசாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளலாம். இதை வடிகட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே தலையில் அப்ளை செய்யலாம்.

மிக்ஸி ஜாரில் அரைத்த விழுதை அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டை உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு சேர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு வாடை பிடிக்காது என்றால் வெள்ளை கரு மட்டும் சேர்க்கலாம். தேவை என்பவர்கள் மஞ்சள் கருவோடு ஹேர் பேக் போட்டால் இன்னும் முடி வலுபெறும். அடுத்து இதில் சேர்க்கக்கூடிய பொருள் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன். ஆலிவ் எண்ணெயை, தயார் செய்து வைத்திருக்கும் பேக்கில் ஊற்றி, நன்றாக அடித்து கலக்கினால் மொழு மொழு வென சூப்பரான ஹேர் பேக் கிடைத்துவிடும்.

- Advertisement -

இதை தலையில் அப்ளை செய்ய எந்த சிரமமும் இருக்காது. தலைமுடியில் நன்றாக எண்ணெய் வைத்து சிக்கு எடுத்து விடுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை வேர்க்கால்களில் படும்படி முதலில் போட்டுவிட்டு, பிறகு நுனி முடி வரை, முடியை சின்ன சின்ன பாகங்களாக பிரித்து ஹேர் பேக்கை தடவி விடவும். பிறகு 20 நிமிடம் கழித்து உங்கள் தலைக்கு ஜென்டில் ஆன ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு குளித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்களை பாடாயப்படுத்தும் பேன் பொடுகு தொல்லையில் இருந்து எளிதில் விடுபட ஒரே ஒரு கற்பூரத்தை இத்துடன் சேர்த்து தலையில் தேய்த்து விடுங்கள். இதை தேய்த்த உடனே பேன்கள் செத்து விடும்

வாரத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை போட்டு வர உங்களுடைய தலைமுடி அழகாக பாதுகாப்பாக சில்க்கியாக சூப்பராக இருக்கும். நம்பவே மாட்டீங்க. வறட்சி அடைந்த உங்கள் தலைமுடி அப்படியே எப்போதும் வழுவழுவென மாறிவிடும். தொடர்ந்து இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -