76 பந்துகள் 16பவுண்டரி 10சிக்ஸர் 172ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் – சிறந்த டி20 வீரர் ஐ.சி.சி அறிவிப்பு

finch

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி கவனித்து டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

icc-awards

இந்நிலையில் சென்ற 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 ஆட்டத்திற்கான விருது இந்த வருடம் ஆஸ்திரேலிய அணி வீரருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 76 பந்துகளில் 16பவுண்டரி மற்றும் 10சிக்ஸர்களுடன் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரரான பின்ச் -க்கு கிடைத்துள்ளது.

இதனை ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் டி20 போட்டிகளின் கேப்டனான ஆரோன் பின்ச் தனது அதிரடி ஆட்டம் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதோ அந்த பதிவு :

சென்ற இந்திய தொடரின் போது ஆஸ்திரேலிய அணி வீரரான பின்ச் ஆட்டம் சற்று பின்னடைவாகவே இருந்தது. இந்திய தொடர் முழுவதும் அவரால் சோபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவும் படிக்கலாமே :

இவர்தான் பெஸ்ட். 2018ஆம் ஆண்டின் சிறந்த நடுவராக இலங்கையை சேர்ந்த நடுவர் தேர்வு – ஐ.சி.சி அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்