1 டம்ளர் தண்ணீரும், 1 ஸ்பூன் கல் உப்பும் இருந்தால் போதும்! உங்கள் வீட்டில் கெட்ட அதிர்வலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

amman-salt
- Advertisement -

நல்லது என்று ஒன்றிருந்தால், கெட்டது என்று ஒன்று இருக்கும், இதுவே உலக நியதி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு விஷயங்கள் நெகடிவ், பாசிடிவ் என்று நிச்சயமாக இருக்கும். அப்படியான வகையில் வீட்டிலும் நெகட்டிவ் எனர்ஜிகள் மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிகள் இருக்கும். இதில் நெகட்டிவ் எனர்ஜிகள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும். கெட்ட கனவுகள், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போதல் நடக்கும். அது போல் வீட்டில் பண வரவும் தடைபட்டு, கஷ்டம் ஏற்படும். உங்கள் வீட்டில் நெகட்டிவ் அதிர்வலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

negative-energy-home

வீட்டில் எப்பொழுதும் தொடர்ந்து ஒரே எனர்ஜி இருப்பதில்லை. பாசிட்டிவ், நெகட்டிவ் என்று மாறி மாறி தான் அந்த அதிர்வலைகள் வீட்டில் பரவும். நாம் அன்றாடம் செய்யும் பூஜைகளும், நம்முடைய கர்ம வினைகளும், வீட்டில் நாம் நடந்து கொள்ளும் முறையும், நமது எண்ணங்களும் இதனை தீர்மானிக்கின்றன. இதில் நல்ல அதிர்வலைகள் இருப்பதையும், கெட்ட அதிர்வலைகள் இருப்பதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

- Advertisement -

அமாவாசை அன்று இந்தப் பிரபஞ்சத்தில், இந்த இரண்டு வகையான சக்திகளும் அதிக பலம் பெற்று இருக்கும். அமாவாசை தினத்தில் தெய்வ சக்தியும், துஷ்ட சக்தியும் தன்னுடைய முழு பலத்தை காண்பிக்கும். இதனால் தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை அன்று அதிகமாக தங்களுடைய செயல்களில் அதை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுக்கு அந்த நேரத்தில், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத மனநிலை வந்துவிடும்.

amavasai

அந்த அளவிற்கு அதிக சக்தி வாய்ந்த அம்மாவாசையில், இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் நல்லது. பவுர்ணமியை விட சக்தி வாய்ந்தது என்பதால் தான் அமாவாசையில் திருஷ்டிகள் சுற்றி போடுவதை, நம் முன்னோர்கள் செய்து வருகின்றனர். எனவே வருகின்ற அமாவாசை அன்று இரவு தூங்க செல்லும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் அளவிற்கு சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி டம்ளரை தவிர வேறு எந்த டம்ளரையும் கட்டாயம் உபயோகிக்க கூடாது. அதனால் பலன் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கல் உப்பை சேர்த்து கொள்ளுங்கள். கல் உப்பை நீங்களாக கலக்கக்கூடாது. கல் உப்பை போட்டு விட்டு வீட்டின் ஏதாவது ஒரு அறையில் யாருடைய கால்களிலும் தொட்டு விடாதபடி ஓரமாக வைத்து விடுங்கள். ஒருமுறை வைத்தபின் மீண்டும் அந்த கண்ணாடி டம்ளரை மறு நாள் காலையில் தான் தொட வேண்டும். அதனால் வைக்கும் பொழுதே பார்த்து வையுங்கள்.

water

இரவு 8 மணிக்கு வைத்தால் மறுநாள் காலையில் எட்டு மணிக்கு எடுத்து பாருங்கள். அந்த டம்ளரில் இருக்கும் கல் உப்பு கரைந்து இருக்கும். டம்ளரில் இருக்கும் தண்ணீர் நிறம் மாறாமல் வெண்மையாக இருந்தால், வீட்டில் நல்ல சக்தி இருக்கிறது என்று அர்த்தம். அதுவே தண்ணீரின் நிறம் லேசாக மாறி இருந்தாலும், வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் ஒவ்வொரு அறையாக வைத்து சோதித்துப் பார்க்கலாம். அல்லது ஒரே நாளில் நாலைந்து கண்ணாடி டம்ளர்களை வைத்து எல்லா அறைகளையும் கூட சோதிக்கலாம்.

- Advertisement -

salt1

நிறம் மாறி வீட்டில் கெட்ட அதிர்வலைகள் இருப்பது உறுதி செய்து விட்டால், அந்த வீட்டில் கோமியம், கோவில் தீர்த்தம், மஞ்சள் தண்ணீர், வேப்பிலை கரைத்த தண்ணீர் இவைகளை கலந்து வீட்டில் எல்லா மூலைகளிலும் தெளித்து விட வேண்டும். வீடு மற்றும் வீட்டை சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் இந்த தண்ணீரை தெளிப்பதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் எளிதாக விலகிவிடும்.

theertham

மறுமுறை அமாவாசை அன்று இதே பரிகாரத்தை நீங்கள் செய்து பார்த்தால் தண்ணீரின் நிறம் வெண்மையாக இருப்பதை நீங்களே பார்க்கலாம். வீட்டை எப்போதும் சுத்தமுடன் வைத்திருப்பதும், நல்ல வார்த்தைகளை பேசுவதும், இறை பக்தியில் மூழ்கி இருப்பதும், நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். இது எதுவுமே செய்யாதவர்கள் வீட்டில் கண்டிப்பாக கெட்ட அதிர்வுகள் நுழைந்து விடும்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களால் எந்த திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க, சனி தோஷம் நீங்க வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -