தூங்கி எழுந்ததும் செய்ய வேண்டிய முக்கிய 5 குறிப்புகள்! இதை தவறாமல் கடைபிடித்தால் உங்களை யாரும் வெல்ல முடியாது தெரியுமா?

wake-up-sleep
- Advertisement -

ஒரு மனிதனுக்கு இரவு தூக்கம் என்பதும், காலை முழிப்பது என்பதும் ஒரு ஜனனம் மற்றும் மரணத்தை குறிக்கிறது என்கிறது ஜோதிடம். ஒவ்வொரு முறை நீங்கள் தூங்கி எழும் பொழுது புதிய விடியலாகவே இருக்கும். தூக்கத்திலேயே இறந்து போகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. அப்படி இருக்கும் பொழுது விடியல் என்பது புது ஜனனம் தானே? இப்படி புதிதாக ஜனனிக்கும் ஒவ்வொரு நாளும் சில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்களை வெல்வதற்கு இந்த உலகத்தில் யாராலும் முடியாது. அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mobile-at-night

இரவு தூங்க செல்லும் பொழுதே முதலில் செய்ய வேண்டியது நவீன உபகரணங்களை புறக்கணிப்பது தான். தூக்கமின்மைக்கு முதல் காரணம் நாம் பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற நவீன உபகரணங்கள் தான் என்கிறது ஒரு ஆய்வு. என்னேரமும் அதனை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மூளையில் ஒருவிதமான தூண்டுதலை ஏற்படுத்தி தூக்கம் வரவிடாமல் தடுத்து விடுகிறது. தூங்க செல்லும் முன்பு இவற்றைப் புறக்கணித்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பொழுது இயல்பாகவே மூளை தளர்வடையும். நமக்கு நல்ல சிந்தனைகளும் கூடவே சேர்ந்து கிடைக்கும். புத்தகத்தை கூட செல்போன் வடிவில் பார்க்கக்கூடாது. கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துவிட்டு பின்னர் தூங்கச் செல்லுங்கள், கொஞ்ச நேரத்தில் நிம்மதியான தூக்கம் வரும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது சோம்பல் முறிப்பது ஆகும். சோம்பல் முறிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒரு செயல் ஆகும். அந்த நாளின் துவக்கம் உடலில் இருக்கும் அசதி நீங்கி நல்ல ஒரு புத்துணர்வு பெறச் செய்ய சோம்பல் நீக்க வேண்டும். நாய், பூனை போன்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் கூட எழுந்ததும் முதல் வேலையாக சோம்பல் முறிப்பதை நாம் பார்த்திருப்போம்.

wakeup1

கை, கால்களை உதற செய்து அசைத்து, கழுத்தை சிலிர்ப்பி உடலில் இருக்கும் தூக்க கலக்கத்தை, சோர்வை நீக்குவதற்கு இவ்வாறு செய்ய வேண்டும். ஒரு நாள் நீங்கள் செய்து பாருங்கள்! அதிலேயே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும். எழுந்தவுடன் அப்படியே சோம்பல் முறிக்காமல் சென்று பல்லை விலக்கினால் உடலில் இருக்கும் சோர்வு நீங்குவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும். அந்த சிறிது நேரம் அந்நாளைய மொத்த உற்சாகத்தையும் குறைக்கும். ஆனால் இப்படி நாம் செய்யும் பொழுது அன்றைய நாள் முழுவதும் புதுவிதமான புத்துணர்வுடன் காணப்படுவோம்.

- Advertisement -

அடுத்ததாக நாம் பல் துலக்கி, குளித்து முடித்துவிட்டு குறைந்தது பத்து நிமிடமாவது தியானம் மேற்கொள்ள வேண்டும். தியானம் மனதை ஒருமுகப்படுத்தும். அன்றைய நாள் என்ன செய்ய வேண்டும்? என்ற திட்டமிடலை சரியாக செய்யத் தூண்டும். தேவையற்ற சிந்தனைகளை கலைத்து, நேர்மறையான எண்ணங்களை உருவாக செய்யும். அதிக நேரம் தேவை இல்லை 5 லிருந்து 10 நிமிடம் தியானம் மேற்கொண்டு பின்னர் அன்றாட வேலைகளை துவங்கினால் அந்நாள் முழுவதும் நேர்மறை சிந்தனையுடன் நீங்கள் காணப்படுவீர்கள்.

Thiyanam

மூன்றாவதாக இன்றைய நாள் முழுவதும் நான் உற்சாகத்துடன் இருப்பேன், எந்த ஒரு பாவத்தையும் செய்யப் போவது இல்லை, அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொள்வேன், என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன், எனக்கு என்னை மிகவும் பிடிக்கும், நான் அழகாக உணர்கிறேன், என்னால் இன்று பலருக்கும் நன்மைகள் நடக்க போகிறது, இன்றைய நாள் இனிய நாளாக நிச்சயமாக அமையும் என்கிற நல்ல வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லி விட்டு பின்னர் அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். இந்த நேர்மறையான வார்த்தைகள் உங்களை அன்றைய நாள் முழுவதும் அதீதமான உற்சாகத்துடன் வைத்திருக்கும். அந்த எண்ணமே வெற்றியை உங்களை நோக்கி கொண்டு வர செய்யும்.

men greeting sun

ஒரு நல்ல விஷயத்திற்காக வெளியில் செல்கிறீர்கள் அல்லது உங்கள் திறமைக்கு ஒரு சவால் காத்திருக்கிறது என்றால் அதில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்கிற வார்த்தைகளையும் சொல்ல வேண்டும். இதில் அசிங்கப்பட எதுவுமே இல்லை, உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு பின்னர் புறப்படுங்கள், ஜெயம் உங்களுக்கு தான். இறுதியாக அன்றைய நாள் எப்படி இருக்க வேண்டும்? என்கிற கற்பனையை மனதில் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு அதிகபட்சம் பத்து நிமிடம் கூட ஆகாது. இப்படி நீங்கள் உங்களுடைய முதல் பொழுதை துவங்கும் பொழுது நிச்சயம் உங்களை வெல்ல யாராலும் முடியாது.

- Advertisement -