பிரசவத்துக்கு பிறகு கூட பெண்களுக்கு முடி உதிராமல் இருக்க இப்படிப்பட்ட ஐடியாவை தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். பிறகு வாழ்நாள் முழுவதும் முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

hair26
- Advertisement -

சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு கூட முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உடலுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுப் பொருட்களை சரியான அளவில் எடுத்து வந்தால், முடி உதிர்வை குறைக்கலாம். உதாரணத்திற்கு ஆளி விதை, என்று சொல்லப்படும் ஃபிளக்சீட், பூசணி விதை, பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், வேர்க்கடலை உருண்டை, இப்படி பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை சீரான முறையில் சரியான அளவில் சாப்பிட்டு வர வேண்டும். இதோடு சேர்த்து ஒரு சில ஹேர்பேக்குகளை போடுவதன் மூலமும் முடி உதிர்வு பிரச்சனையை தவிர்க்கலாம். அப்படி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஹேர்பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

முடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்:
குழந்தை பெற்றவர்கள் தான் இந்த ஹேர் பேக்கை போட வேண்டும் என்று அவசியம் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த ஹேர் பேக்கை போடலாம். குறிப்பாக பிரசவத்தில் முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்களுக்கு முடிக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து தேவைப்படும். அதனால், இந்த ஹேர் பேக்கை குறிப்பாக அவர்கள் போடும்போது இரண்டு மடங்கு பலன் அதிகமாக கிடைக்கும். இந்த ஹேர் பேக்குக்கு நாம் எடுக்கப் போகும் பொருட்கள் ஆலி விதை, முருங்கை கீரை, செம்பருத்தி பூ, இந்த மூன்று பொருட்கள் தான்.

- Advertisement -

உங்களுக்கு செம்பருத்தி பூவும் முருங்கைக் கீரையும் பிரஷ்ஷாக கிடைத்தால் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இந்த இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொடியாக கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். (பொடியை ஹேர் பேக்கில் சேர்க்கும் போது, முடி ட்ரை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே பொடி போட்டு தயார் செய்த பிறகு, அந்த ஹேர் பேக்கில்  ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து தலையில் போடவும்.)

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, 2 ஸ்பூன் ஆளி விதை, 2 கைப்பிடி முருங்கைக்கீரை, 10 செம்பருத்தி பூக்களை, போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் ஐந்து நிமிடத்தில் லேசாக கொழ கொழப்பாக மாறும். இது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே வடிகட்டிக் கொள்ளவும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் இந்த தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க வைக்கும் போது நாம் இதில் போட்டிருக்கும் மூன்று பொருட்களின் சத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும்.

- Advertisement -

வடிகட்டிய தண்ணீர் லேசாக ஜெல் பதத்தில் இருக்கும். இந்த ஜெல்லைத்தான் நம்முடைய தலையில் அப்ளை செய்யப் போகின்றோம். தலைமுடியில் முதலில் சிக்கு எடுத்து தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை உங்களுடைய வேர்க்கால்களில் படும்படி முதலில் போடவும். பிறகு மீதம் இருக்கும் ஹேர் பேக்கை நுனி முடி வரை போட்டு, ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து வரவும்.

இதையும் படிக்கலாமே: பேன், பொடுகு, தொல்லையால் உங்கள் தலைமுடி அதிகமாக வேகமாக கொட்ட தொடங்குதா? உங்கள் ஸ்கேல்பை சட்டுன்னு சுத்தம் செய்ய இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

இதேபோல வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வர உங்களுடைய தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டலாம். ஆளிவிதையோடு குறிப்பிட்ட இந்த பொருட்களை தான் சேர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நெல்லிக்காய் பொடி, மருதாணி பொடி, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, இப்படிப்பட்ட முடிக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய பொருட்களை கூட மாற்றி மாற்றி போட்டு கொதிக்க வைத்து தலையில் தடவலாம் தவறு கிடையாது. இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -