பேன், பொடுகு, தொல்லையால் உங்கள் தலைமுடி அதிகமாக வேகமாக கொட்ட தொடங்குதா? உங்கள் ஸ்கேல்பை சட்டுன்னு சுத்தம் செய்ய இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

hair25
- Advertisement -

பேன், பொடுகு, ஈறு, சுண்டு, இப்படிப்பட்ட பலவகையான பிரச்சனைகள் தலையில் அதிகமாக இருந்தால், முடி கொட்டிக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் ஹேர் பேக் ரெமிடியை முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும், தலை முடிக்கு அது முழுமையாக சென்றடையாது. உங்களுடைய ஸ்கேல்பை உடனடியாக சுத்தம் செய்ய அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டிகள் செய்த வைத்தியத்தை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மிக மிக எளிமையான குறிப்பு தான் இது. இதை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே உங்களுடைய ஸ்கால்ப் ஒரு சில நாட்களில் சுத்தமாக மாறிவிடும். பேன் பொடுகு ஈறு சுண்டு பிரச்சனைகள், அரிப்பு பிரச்சனைகள், தலையில் இருக்கும் சின்ன சின்ன கொப்பளங்கள் எல்லாம் கூட ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். வாங்க இந்த எளிமையான அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பேன் பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணெய் தயார் செய்யும் முறை:
இந்த ரெமெடிக்கு நமக்கு இரண்டு பொருட்கள் தான் தேவை. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், பூண்டு. 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்க்கு, 5 சின்ன பல் பூண்டு எடுத்து தோல் உரித்து ஒன்றும் இரண்டுமாக நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெயை ஊற்றி லேசாக சூடு செய்து எடுத்து வைத்திருக்கும் பூண்டை அந்த எண்ணெயில் போட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் மிதமான தீயில் பூண்டு காய்ந்தால் போதும். பிறகு இதை வடிகட்டிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும் போது உங்களுடைய தலையில் அதை தேய்க்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தலையை முதலில் நன்றாக சிக்கு எடுத்துக்கொண்டு, ஒரு சீப்பை கையில் வைத்துக் கொள்ளுங்கள். முடியை பாகமாக பிரித்து நன்றாக மயிர் கால்களில் படும்படி இந்த எண்ணெயை தடவ வேண்டும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த எண்ணெயை தொட்டு தொட்டு தலையில் வேர்க்காலில் படும்படி வையுங்கள்.

பிறகு உங்களுடைய விரல்களை மயிர்க்கால்களுக்கு உள்ளே விட்டு விரல்கள் ஸ்கேல்பில் படும்படி நன்றாக ஐந்து நிமிடம் அழுத்தம் கொடுத்து தலை முடியை மசாஜ் செய்ய வேண்டும். அதாவது ஸ்கேல்பில் வேர் கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயை நுனி மூடி வரை தடவிக்கொள்ளலாம். பிறகு 10 நிமிடம் கழித்து மயிலான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

வெறும் பூண்டு மட்டும் தான் இந்த எண்ணெயில் நாம் சேர்த்து இருக்கின்றோம். ஆனால் இந்த பூண்டு உங்கள் ஸ்கேல்பை முழுமையாக சுத்தம் செய்யும் கூடிய வேலையை சீக்கிரம் செய்ய தொடங்கும். அது மட்டும் இல்லாமல் வெயிலில் சென்றால் முடி சில பேருக்கு வெடிப்பு விட்டு உடைய தொடங்கும். அந்தப் பிரச்சினையை தடுக்கவும் இந்த எண்ணெய் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். முடி உதிர்வை கட்டுப்படுத்தி ஸ்கேல்பை சுத்தம் செய்து முடியை அடர்த்தியாக வளர செய்யவும் இந்த எண்ணெய் உதவியாக இருக்கும். இத்தனை சிறப்பு அம்சங்களும் கொண்ட இந்த எளிமையான எண்ணெயை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வந்தாலே தலை முடியில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: அடிக்கும் வெயிலில் தலையில் வியர்த்து வடிந்து, அரிப்பு பொடுகு தொந்தரவால் முடி கொட்டோ கொட்டென கொட்டுதா? 3 வாரங்களில் அந்தப் பிரச்சினையை சரி செய்ய இதோ உங்களுக்கான எளிய தீர்வு.

இன்றோ நேற்றோ இந்த குறிப்பை நாம் பின்பற்றி வரவில்லை. பாட்டி காலத்தில் இருந்து இந்த குறிப்பை பின்பற்றி வருகிறார்கள். ஆகவே, பக்க விளைவுகள் வந்துவிடுமோ என்று எந்த பயமும் தேவை இருக்காது. குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -