ஆலமர விழுது போல் உங்களுடைய முடி அடர்த்தியாக வளர, ஆளி விதை ஹேர் பேக்கை தலையில் இப்படி போட்டு பாருங்க. கட்டு கட்டாக முடி கட்டுக்கடங்காமல் வளரும்.

hair10
- Advertisement -

கைக்கு அடங்காத கட்டு கட்டாக முடி வளர்ச்சியை பெறுவதற்கு ஒரு சூப்பரான ஹேர் ஜெல் நம் வீட்டிலேயே தயார் செய்யப் போகின்றோம். இந்த ஹேர் ஜெல்லை தலையில் போட்டால் தலைமுடி கண்டிஷனர் போட்டது போல அவ்வளவு சில்கியாக மாறிவிடும். பார்ப்பதற்கு முடி அத்தனை அழகாக இருக்கும். வேர்க்கால்கள் நன்றாக வலுபெறும். வெறும் கூந்தலுக்கு மட்டும் இந்த ஜெல் கிடையாதுங்க. நம்முடைய சருமத்திற்கும் இந்த ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தலைமுடி அழகாகவும், சருமம் அழகாகவும் சூப்பரான ஒரு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

தலை முடி அடர்த்தியாக வளர, சருமம் பொலிவு பெற, டூ இன் ஒன் ஜெல் தயார் செய்யும் முறை:
2 ஸ்பூன் வெந்தயத்தை முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயம் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறியிருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரோடு ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதில் இரண்டு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, செம்பருத்தி பூ 10, ஆளி விதை 2 ஸ்பூன், போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

ஆளி விதை தண்ணீரில் வெந்து இந்த ஜெல் கொழ கொழப்பாக பிங்க் நிறத்தில் நமக்கு கிடைக்கும். இது சூடாக இருக்கும் போதே, ஒரு எவர் சில்வர் வடிகட்டியில் ஊற்றி ஃபில்டர் செய்ய வேண்டும். பிங்க் நிறத்தில் சூப்பராக ஒரு ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை இரண்டு பாட்டிலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாட்டிலில் இருப்பதை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

இன்னொரு பாட்டிலில் இருக்கக்கூடிய ஜெல்லில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் விருப்பம் போல தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் எது தேவையோ அதை ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தலை முடிக்கு பயன்படுத்த போகின்றோம்.

- Advertisement -

முதலில் தலை முடிக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்த்து விடுவோம். உங்களுடைய ஸ்கேல்பில் முதலில் இந்த ஜெல் படும்படி அப்ளை செய்துவிட்டு, அதன் பின்பு நுனி மூடி வரை இந்த ஜெல்லை அப்ளை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய முடியின் நுனியில் வெடிப்பு இருந்தால் கூட, அதை சரி செய்யக்கூடிய தன்மை இந்த ஹேர் பேக்கில் உண்டு. 20 நிமிடங்கள் கழித்து ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு தலையை அலசி விடலாம்.

வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை போட்டு வர உங்களுடைய முடி நரம்பு போல அறுபடாமல் சூப்பராக வளர தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க. சரி முகத்துக்கு போடுவதற்கு ஒரு பாட்டிலில் தனியாக எடுத்து வைத்திருக்கிறோம் அல்லவா. அதை எப்படி முகத்தில் அப்ளை செய்வது. முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த ஜெல்லில் லேசாக தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்படியே சருமம் இழுத்துப் பிடிக்கும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

இதையும் படிக்கலாமே: 2 ஸ்பூன் கோதுமை மாவு இருந்தா அதை வைத்து இப்படி பேக் போட்டு பாருங்க. உங்க முகம் அப்படியே பளபளன்னு மாறி மாவு பொம்மை மாதிரி அழகா மாறிடுவீங்க. அப்புறம் எல்லோரும் உங்கள அசந்து போய் பாப்பாங்க.

இந்த பேக்கை ஐந்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்து வைத்துக் கொள்ளலாம். ஜெல் கட்டி ஆகிவிட்டால் அப்ளை செய்வதற்கு சிரமம் இருந்தால் டபுள் பாய்லிங் மெத்தடில் லேசாக இதை சூடு செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த எளிமையான இரண்டு அழகு குறிப்புகளும் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -