2 ஸ்பூன் கோதுமை மாவு இருந்தா அதை வைத்து இப்படி பேக் போட்டு பாருங்க. உங்க முகம் அப்படியே பளபளன்னு மாறி மாவு பொம்மை மாதிரி அழகா மாறிடுவீங்க. அப்புறம் எல்லோரும் உங்கள அசந்து போய் பாப்பாங்க.

face beauty
- Advertisement -

கோதுமை மாவு அழகு குறிப்பு

அரிசி எவ்வாறு முக்கியமான உணவுப் பொருளாக இருக்கின்றதோ, அதே போன்று கோதுமையையும் உலகெங்கிலும் பல கோடி மக்கள் அன்றாட உணவு பொருளாக பயன்படுத்துகின்றனர். அந்த கோதுமையில் இருந்து பெறப்படுகின்ற கோதுமை மாவு மூலம் பல வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கோதுமை மாவை பயன்படுத்தி பெண்கள் தங்களின் அழகை மெருகேற்றிக் கொள்ள கூடிய சில அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கோதுமை ஃபேஸ் பேக்

கோதுமை மாவு முகத்தில் இருக்கின்ற எண்ணெய் வடியும் பிரச்சனைகளை நீக்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை கொண்ட பெண்கள் ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பசும்பாலை ஊற்றி இரண்டையும் நன்கு கலந்து ஒரு மெல்லிய பேஸ்ட் பதத்தில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் எண்ணெய் வடியும் பெண்கள், தங்களின் முகம் முழுவதும் நன்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு 20 நிமிடங்கள் வரை இந்த கலவை முகத்தில் நன்கு காய்ந்த பிறகு, முகத்தை குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கொருமுறை செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறைந்து, முகம் அழகு பெறும்.

முக சுருக்கம் நீங்க கோதுமை மாவு

பெண்களின் முகம் பார்ப்பதற்கு பளிச்சென இருக்கவும், முகத்தில் ஏற்பட்டிருக்கின்ற வயதான தோற்றம் நீங்கி இளமை ததும்பும் முகத்தை பெறவும், பெண்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி பலன் பெறலாம். ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை போட்டுக் கொண்டு, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் விட்டு மூன்றையும் நன்கு கலந்து, பெண்கள் தங்களின் முகம் முழுவதும் நன்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் வரை இந்த கலவை முகத்தில் காய்ந்த பிறகு, முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ் பேக்கை பயன் படுத்தலாம்.

- Advertisement -

முக கருமை நீங்க கோதுமை மாவு

கோதுமை மாவில் இருக்கின்ற சத்துக்கள் முகத்தோலில் இருக்கின்ற கருமை நிறத்தை போக்குகின்றது. ரோஸ் வாட்டர் முகச்சருமத்தில் இருக்கின்ற தளர்ச்சியை போக்கி முகத்தை இளமை தோற்றம் பெற செய்கிறது. இதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பசுந்தயிர், 1 டீஸ்பூன் சுத்தமான தேன் ஆகியவற்றை சேர்த்து, மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பேஸ் பேக்கை பெண்கள், தங்கள் முகம் மற்றும் கழுத்து, கைகளின் மேற்புறப் பகுதிகளில் தடவி, சுமார் ஒரு 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவதால் பெண்களின் சருமத்தில் இருக்கின்ற கருமை நிறம் நீங்குவதோடு, தோளில் ஈரபதத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனால் பெண்களின் இயற்கையான அழகு காக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பொடுகு நீங்கி தலைமுடி வேர்க்காலில் இருந்தே புதிதாக முளைக்க இந்த 3 பொருள் இருந்தால் போதுமே! 4 வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இந்த பதிவில் கோதுமை மாவை வைத்து உங்கள் முக அழகை எப்படி அதிகப்படுத்தி கொள்ளுவது என்பதையும், முக சுருக்கம் கருத்திட்டுகள் போன்ற பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பதையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -