பாத வெடிப்பு பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபட எளிய குறிப்புகள்.

rough smooth feet
- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல செயல்களை மேற்கொள்கின்றோம். அந்த முகத்திற்கு காட்டும் அக்கறையில் ஒரு சிறிய பங்கு கூட நம்முடைய பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை கவனிக்காததால் பாதங்களில் நமக்கு வெடிப்புகள் ஏற்படும். இந்த வெடிப்புகள் ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

அதற்கு முறையான பராமரிப்பு முறையை மேற்கொள்ளவில்லை என்றால் அந்த பாதத்திலிருந்து ரத்தம் வருவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட பாத வெடிப்பை எப்படி சரி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பாத வெடிப்பால் பெரிதும் கஷ்டப்படுபவர்கள் இல்லத்தரசிகளே. ஏனென்றால் அவர்கள் வீட்டு வேலைகளுக்கு கவனம் செலுத்தி விட்டு தங்களுடைய உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதுவும் பாதம் என்றால் யார் அதை பார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் விட்டு விடுவார்கள்.

ஆனால் அவ்வாறு நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனுடைய வேதனையால் அனுதினமும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். இதற்காக பியூட்டி பார்லர் சென்றோம் என்றால் அவர்கள் ஏதேதோ செய்து நம்முடைய பர்சை காலி செய்து விடுவார்கள்.

- Advertisement -

வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம்முடைய பாதங்களின் ஆரோக்கியத்தை நம்மால் பராமரிக்கும் முடியும். பாதத்தில் வெடிப்புகள் இருப்பவர்கள் இரவு படுக்க செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான நீரில் சிறிது கல்லுப்பையும், எலுமிச்சம்பழ சாற்றையும் கலந்து, அதில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு குறைந்தது 10 நிமிடமாவது வைத்திருக்க வேண்டும்.

பிறகு பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெடிப்புகளுக்கு இடையில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கும். அழுக்குகள் நீங்கினால் தான் அதில் நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலனால் பாதவெடிப்பு மறையும்.

- Advertisement -

குறிப்பு 1: நம் முன்னோர்கள் அவர்களின் கைகளுக்கு எப்படி மருதாணி வைத்து அழகு பார்த்தார்களோ அதே போல் அவர்களுடைய பாதங்களுக்கும் மருதாணியை வைத்து அழகு பார்த்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் நாம் அவ்வாறு செய்வதில்லை. அதையும் மீறி பாதங்களில் மருதாணி வைப்பது என்றால் மெஹந்தியை வைத்து விடுகிறோம். மருதாணி ஒரு சிறந்த கிருபினாசினி இதை நாம் பாத வெடிப்பு இருக்கும் பகுதியில் கனமாக பூசுவதன் மூலம் பாதத்தில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் நீங்கி பாத வெடிப்பு சரியாகும்.

குறிப்பு 2: ஒரு இனுக்கு வேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது துளி சுண்ணாம்பு மற்றும் சிறிய துண்டு விரலி மஞ்சள் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். இதில் தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக விளக்கெண்ணையை சேர்த்து அரைக்க வேண்டும். நன்றாக மையாக அரைத்த பிறகு இந்த பேஸ்ட்டை குதிங்கால் வெடிப்புகளில் போடுவதன் மூலம் குதிங்கால் வெடிப்பு மறையும்.

வெடிப்பு வராமல் தடுக்க: பாத வெடிப்பு சரியாகிவிட்டது என்று அப்படியே இருந்து விடக் கூடாது. ஏனென்றால் மறுபடியும் இந்த வெடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பாத வெடிப்பு சரியான பிறகு இரவு படுக்கச் செல்வதற்கு முன் பாதங்களில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். காலையில் நாம் குளித்து முடித்த பிறகு பாதங்களில் இருக்கும் ஈரத்தன்மையை சுத்தமாக துடைத்துவிட்டு சிறிது விளக்கெண்ணெயை பாதங்களில் தடவ வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படாத வண்ணம் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: ஸ்கேல்பிலிருந்து உங்க முடி முட்டி மோதி கடகடவென வளர்ந்தே தீரும். இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து ஹேர் பேக் போட்டால்.

மிகவும் எளிமையான இந்த குறிப்புகளை நாம் நம் பாதங்களில் செய்து பாத வெடிப்பின்றி நிறைவாக வாழ்வோம்.

- Advertisement -