என்னங்க எப்படி அரைச்சு வச்சாலும் மருதாணி உங்க கையில செவக்கவே இல்லையா? இனி மருதாணி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க வச்ச ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கை செக்கச் செவேர்ன்னு சிவந்திடும்.

mehanthi tips
- Advertisement -

எப்போதுமே மருதாணிக்கும் பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் மருதாணியில் பல நன்மைகள் இருந்தாலும் கூட இது அழகியலோடு தொடர்பு உடையது. மருதாணி அரைத்து கைகளில் வைப்பதாக இருந்தாலும் சரி அல்லது முடி வளர, கேசத்திற்கான எண்ணெய் தயாரிப்பது, பாத வெடிப்புக்கு என பல அழகு தொடர்பான விஷயங்களுக்கு இந்த மருதாணியை பயன்படுத்துகிறோம். இது மட்டும் இன்றி இந்த மருதாணிக்கு தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மருதாணி அரைத்து கைகளில் வைக்கும் போது நம் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக் கொள்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். கால மாற்றத்தால் இப்போது கோன் வந்து விட்டாலும் பழைய முறையில் அரைத்து வைப்பது இன்றும் பலரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் அரைத்து வைக்கும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரி சிவப்பது கிடையாது. இந்த வீட்டு குறிப்பில் உள்ள குறிப்புகளின் படி மருதாணி அரைத்துப் பாருங்கள், யார் வைத்தாலுமே ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கை செக்கச் செவேர் என்று சிவந்து விடும்.

- Advertisement -

மருதாணி அரைக்கும் போது சேர்க்க வேண்டிய பொருள்
முதலில் எப்பொழுதுமே மருதாணி இலை பறித்த உடன் தண்ணீரில் அலசி விடுங்கள் .ஏனெனில் அதில் தூசி சிறுசிறு பூச்சிகள் இருக்கும் இவை அப்படியே வைக்கும் போது நம்முடைய சருமத்திற்கு சில நேரங்களில் ஒத்துக் கொள்ளாது. அலசிய மருதாணியை வெகுநேரம் விடாமல் தண்ணீரை வடித்து விட்டு உடனே அரைத்து விட வேண்டும்.

ஒரு மிக்ஸர் ஜாரில் இரண்டு கைப்பிடி அளவு மருதாணி எடுத்துக் கொண்டீர்கள் ஆனால் அதற்கு ஆறு முழு கிராம்பை போடுங்கள். இதற்கு உடைந்த கிராம்பை பயன்படுத்த வேண்டாம் எனில் உடைந்த காம்பில் மேல் புறம் இருக்கும் பகுதி இருக்காது. அடுத்ததாக ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் நன்றாக பழுத்து அழுகும் தருவாய்க்கு முன் உள்ள எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் மருதாணியை அரைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோன் பயன்படுத்தி வைப்பதாக இருந்தால் நல்ல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அப்படியே வைப்பதாக இருந்தால் கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அரைத்து எடுத்த மருதாணியை ஒரு பவுலுக்கு மாற்றி பிறகு உங்கள் கைகளை சுத்தமாக கழுவி துடைத்த பிறகு மருதாணி வைக்க தொடங்குங்கள்.

இந்த மருதாணி அரைத்து வைப்பதோடு இல்லாமல் மருதாணி வைத்து காய்ந்த பிறகு சுத்தம் செய்வதிலும் ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பலரும் மருதாணி வைத்து காய்ந்தவுடன் நேரடியாக தண்ணீரில் கைகளை அலசுவார்கள். அப்படி செய்யாமல் முகத்தில் மருதாணி கையில் இருந்து எடுத்த பிறகு கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கையில் தேய்த்து பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பிறகு கைகளை அலசி பாருங்க மருதாணி நன்றாக சிவந்து இருப்பதுடன் சீக்கிரத்தில் அதன் நிறம் மங்காது.

இதையும் படிக்கலாமே: பழைய கவரிங் நகை,வெள்ளி நகைகளை புதுசு போல மாத்த ஒரே ஒரு ஸ்பூன் தயிரோடு இந்த பொருளை மட்டும் சேர்த்து சுத்தம் பண்ணா போதும். நல்லா பளபளன்னு புதுசா வாங்கின மாதிரி மின்னும்

இந்த முறையில் மருதாணி அரைத்து வைத்து பாருங்கள். இனி எப்போதுமே இப்படித் தான் வைப்பீர்கள். என்ன தான் கோன் டிசைன் என்ன மாறினாலும் இப்படி நம்முடைய பாரம்பரிய முறையில் அரைத்து வைப்பது என்பது தனி ஒரு அழகு தான். இந்த பதிவில் உள்ள குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -