பெரும் செல்வத்தை வாரி வழங்கும் ‘கோமாதா’! கோமாதா வழிபாட்டை மறந்த பக்தர்கள்! ‘மாட்டுப் பொங்கலுக்கு’ இதை செய்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி!

lakshmi-gomatha

கோமாதா எனப்படும் பசுவில் அத்தனை தெய்வங்களும் வாசம் செய்வதாக சாத்திரங்கள் சொல்லுகிறது. ஒரு பழத்திற்காக உலகையே சுற்றி வந்து தோற்றுப் போன முருகப்பெருமானும், தாய் தந்தையரையே உலகமாக நினைத்து அவர்களை மட்டும் சுற்றி அந்தப் பழத்தை வென்ற விநாயகப் பெருமானும் நமக்கு அறிவுறுத்துவது என்ன? வெற்றியை அடைய அதிகம் கஷ்டப்பட வேண்டியது ஒரு வழியாக இருந்தாலும், சிறிதும் சிரமப்படாமல் சுலபமாக வெற்றியை அடைவதும் ஒரு வழி தான். இரண்டிலும் நியாயம் சரியாக இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

இன்று பலரும் கோமாதா வழிபாடு என்ற ஒன்றை மறந்து போய் விட்டார்கள். பசுவை தொட்டு வணங்கினால் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது சாஸ்திர நியதி. ஆனால் இன்று பசுக்களை வதைத்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தான் உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோமாதா வழிபாடு பற்றிய விடயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மகாலக்ஷ்மியின் ஸ்வரூபம் கோமாதாவின் பின்புறத்தில் இருக்கிறது. அதனால் தான் பசுவின் பின்புறத்தை தொட்டு பக்தர்கள் வணங்குகிறார்கள். கோமாதாவின் எல்லா இடங்களிலும் எல்லா தெய்வங்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். நீங்கள் எந்த இடத்தை தொட்டு வணங்கினாலும், உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும். தாய் தன் சேய்க்கு பால் கொடுத்து பசியாற்றுவதை போல, இன்று இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும், தன்னலம் கருதாமல் தன்னுடைய மட்டிப்பால் கொடுத்து காத்துக் கொண்டிருப்பது கோமாதா தான். மனிதன் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததை விட, பசும்பால் குடித்து வளர்வது தான் அதிகம். எனவே தான் தாய்க்கு இணையாக கருத வேண்டிய கோமாதாவை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

pasu

நீங்கள் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் கோமாதா வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுத்து பித்ரு தோஷ நிவர்த்தி செய்வது போல, சகல பாக்கியங்களும் கிடைக்க, பசுவை சேயாய் பாவித்து, நீங்கள் அருகம்புல் கட்டு கொடுத்து வரலாம். பசு மாடுக்கு நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்கவே வேண்டாம். அனைத்து கோவில்களிலும் வெள்ளிக் கிழமையில் கோபூஜை நடக்கும். கோவில்களில் இருக்கும் பசுக்களுக்கு அருகம்புல் தானம் செய்யுங்கள்.

- Advertisement -

பசுக்களை பார்ப்பது எங்களுக்கு அரிதானது என்று கூறுபவர்களுக்கு மாற்று வழியும் உண்டு. வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கோமாதா சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்து, சந்தன, குங்கும பொட்டு வைத்து மலரால் அலங்காரம் செய்யுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் சுக்கிர ஓரையில் இதை செய்வதால் எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கும். வெள்ளி வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இல்லை என்று கூறுபவர்களுக்கு வெள்ளிக்கூட வேண்டாம், மண்ணால் செய்யப்பட்ட பசுவின் சிலைக்கு வழிபாடு செய்தால் கூட, உயிருள்ள பசுமாட்டிற்கு செய்யும் பலன்கள் கிடைக்கும்.

silver-komatha

சார்வரி வருடம் 15/1/2021 அன்று வெள்ளிக்கிழமையில் மாட்டு பொங்கல் வருகிறது. அன்றைய நாள் சுக்கிர ஹோரையில் அதாவது 6 மணி முதல் 7 மணி வரை கோ பூஜையை செய்யலாம். பசுமாடு இல்லாதவர்கள் வீட்டில் கோ சிலைக்கு பூஜை செய்தால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கப்பெறும். மாட்டுப் பொங்கல் முதல் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் படிப்படியாக கிடைப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.

banana-for-cow

நீங்கள் எப்போதெல்லாம் பசுக்களை நேரில் பார்க்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உடனே அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம். கன்றுடன் கூடிய பசுவை பிரமானருக்கு தானம் செய்தால் அதைவிட புண்ணியமே இல்லை என்று கூறுவர். உங்களால் முடியும் என்றால் அதையும் செய்யலாம். மேலும் அகத்திக்கீரை, வெல்லம் கலந்த பச்சரிசி, அருகம்புல், வாழைப்பழம் முதலான பொருட்களை பசுக்களுக்கு அடிக்கடி நீங்கள் தானம் செய்து வந்தால் அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெற்று, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை தடைகளும் நீங்கி வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதியானது.

இதையும் படிக்கலாமே
நாளை போகி பண்டிகையில் வீட்டில் இதை கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த 2 பொருளை சேர்த்து வாசலில் கட்டி வைத்தால் எந்த துஷ்ட சக்தியும் உங்களை நெருங்காது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.