குளிர்சாதன பெட்டி பராமரிக்கும் முறை

fridge
- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் அடிப்படை வசதிகள் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த அடிப்படை வசதிகளில் ஒன்றாக திகழ்வதுதான் குளிர்சாதன பெட்டி. குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ண முடியும் அளவிற்கு ஆகிவிட்டது. அப்படி நாம் வாங்கக்கூடிய குளிர்சாதன பெட்டியை எந்த முறையில் பராமரித்தால் நமக்கு எந்தவித பிரச்சினைகளும் வராமல் சுமூகமாக இருக்கும் என்றுதான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

குளிர்சாதனப்பெட்டி என்று கூறக்கூடிய ஃப்ரிட்ஜை நாம் பல உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்காகவும், காய்கறிகளை சேமித்து வைப்பதற்காகவும் பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தக்கூடிய ஃப்ரிட்ஜை நாம் மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும்பொழுது சோப்புத்தூள், ஷாம்பு போன்றவற்றை உபயோகப்படுத்த கூடாது. அப்படி உபயோகப்படுத்துவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய வாசனைகளும் கெமிக்கல்களும் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய பொருட்களில் போய் சேர்ந்து விடும் என்பதால் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு வைத்து தான் பிரிட்ஜிற்குள் துடைக்க வேண்டும்.

- Advertisement -

ஃப்ரிட்ஜுக்கு அடியில் இருக்கக்கூடிய தூசிகளை துடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஃப்ரிஞ் ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது நகர்த்தக் கூடாது. ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து ஐந்து நிமிடம் விட்டுவிட்டு பிறகு தான் நகர்த்த வேண்டும். அதேபோல் திரும்பவும் ஆன் செய்வதற்கு நகர்த்தி வைத்தபிறகு ஐந்து நிமிடம் கழித்து தான் ஆன் செய்ய வேண்டும்.

இதே புதிதாக நாம் பிரிட்ஜ் வாங்குகிறோம் அல்லது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு பிரிட்ஜை மாற்றுகிறோம் என்னும் பட்சத்தில் ஒரு நாள் முழுவதும் ஃப்ரிட்ஜை ஆன் செய்யாமல் அப்படியே விட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய கேஸ் லீக் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

ஃப்ரிட்ஜை எப்பொழுதும் சுவற்றை ஒற்றி வைக்க கூடாது. காற்றோட்ட மிகுந்த ஜன்னல் பக்கத்தில் ஃப்ரிட்ஜை வைப்பது தான் பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. ஃப்ரிட்ஜுக்கு பின்னால் இருக்கும் ட்ரேயில் இருக்கக்கூடிய தண்ணீரை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ எடுத்து நீக்கிவிட வேண்டும். இல்லையெனில் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அந்த ட்ரேயில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதற்கு சிறிது கல் உப்பை அதில் சேர்த்து வைக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜை அதிக நேரம் திறந்து வைப்பது மூலம் கரண்ட் பில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் ஃப்ரிட்ஜை உடனுக்குடன் மூடி விடுவது கரண்ட் பில் குறைக்க உதவும். ஃப்ரிட்ஜை அடிக்கடி திறப்பதன் மூலவும் கரண்ட் பில் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஃப்ரிட்ஜில் கூலிங் ஆகாமல் இருந்தாலோ அல்லது அதிகமான அளவு கூலிங் ஆனாலோ முதலில் ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு உரிய மெக்கானிக்கை அழைத்து பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது எப்படி சிலிண்டரை ஆப் செய்து விட்டு செல்கிறோமோ? அதே போல் பிரிட்ஜையும் ஆப் செய்துவிட்டு அதன் கதவுகளை மூடாமல் திறந்த வண்ணம் வைத்துக் கொள்வது பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பத்து வருடமாக படிந்திருக்கும் உப்பு கறை நீங்க எளிய வீட்டு குறிப்பு

மேற்சொன்ன இந்த அனைத்து விஷயங்களும் அடிப்படையான விஷயங்கள் என்பதால் புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்க நினைப்பவர்களாக இருந்தாலும் ஏற்கனவே ஃப்ரிட்ஜை வைத்து உபயோகப்படுத்துவார்கள் ஆக இருந்தால் இதை தெரிந்து கொண்டு அதன்படி நடப்பது நன்மையை உண்டாக்கும்.

- Advertisement -