குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்படும் இந்த பொருட்களுக்கு ஆயுள் என்னவென்று தெரியுமா? இதை தெரிஞ்சுக்காம இனி இப்படி செய்யாதீங்க!

fish-egg-fridge
- Advertisement -

இந்த நவீன காலத்தில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். எல்லோரிடமும் ஃப்ரிட்ஜ் நிச்சயம் இருக்கும். அப்படி ஃப்ரிட்ஜ் வைத்து பயன்படுத்துபவர்கள், வாங்கிய புதிதில் முழுவதுமாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் போகப்போக அதனால் திருப்தி இல்லாமல், அதை பயன்படுத்துவதை குறைத்து விடுவார்கள். மிக முக்கியமான பொருட்களை மட்டுமே வைத்து பயன்படுத்தினாலும், இந்த குறிப்புகளை கட்டாயம் தெரிந்து வைத்து பயன்படுத்துங்கள்! அவை என்னென்ன? என்பதை இனி இப்பதிவில் பார்ப்போம்.

பால்:
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் வாங்கி வந்தவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவே ஃப்ரீசரில் வைத்தால் இன்னும் இரண்டு நாட்கள் கூடுதலாக பதப்படுத்தி கொள்ளலாம். இதற்கு இடையில் ஃப்ரிட்ஜின் டெம்பரேச்சரை கூட்டவோ, குறைக்கவோ செய்யக்கூடாது! அது போல் மின்தடை ஏற்பட்டால் பால் கெட்டுப் போகும் வாய்ப்புகள் உண்டு. பாலில் இருக்கும் நுண் கிருமிகள் அழிந்து போவதற்கு அடுப்பில் பாலை பொங்கிய உடன் அணைக்கக் கூடாது. சிறிது நேரம் அது கொதித்தால் தான் அதில் இருக்கும் நுண் கிருமிகள் எல்லாம் முழுவதுமாக அழிந்து போகும்.

- Advertisement -

முட்டை:
முட்டை வாங்கும் பொழுது கீறல்கள் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். கீறல் விழுந்த முட்டைகள் அதி வேகமாக கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. முட்டை சுத்தமாக இருந்தாலும், ஒரு முறை கழுவிய பிறகே நீங்கள் வேக வைக்க பயன்படுத்த வேண்டும். முட்டை வேக வைக்கும் போது தண்ணீரை நன்கு கொதித்த பிறகு முட்டையை போட வேண்டும். முட்டையை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால், முட்டையில் இருக்கும் நுண்கிருமிகள் முட்டைக்குள் இறங்கி விடும் அபாயம் உண்டு.

காய்கறிகள்:
பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. மண்ணின் ஈரப்பதத்தின் காரணமாக வேர்விடும் இந்த வேர்க் காய்கறிகள் ஃப்ரிட்ஜில் இருக்கும் சீதோஷ்ண நிலை அதே போல் உள்ளதால் வேர் முளைக்க செய்து விடும். இதனால் பயன்படுத்த இயலாது போய்விடும் ஆபத்து உண்டு. இவற்றை வெளியில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

கீரை:
சமையலுக்கு பயன்படுத்தும் கீரை வகைகள், புதினா, கொத்தமல்லி போன்றவை ஒரு பாலித்தீன் பையில் போட்டு அப்படியே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அந்த கவரில் ஆங்காங்கே ஒரு சிறு துளை இட்டு பின்னர் வைத்து பாருங்கள், அழுகாமல் இருக்கும். பச்சை மிளகாய் காம்பு நீக்கி விட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்து பாருங்கள், ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.

மாவு:
இட்லி தோசைக்கு மாவு அரைப்பவர்கள் அரைத்து முடித்தவுடன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. நன்கு புளிக்க விட்டு பின்னர் பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்த வேண்டும்.

தானியங்கள்:
தானிய வகைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் ஆனால் அதை விட வெளியில் புழுக்கள் பிடிக்காமல் நன்கு சுத்தம் செய்து மூடப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டால் ஒரு வருடம் கூட அப்படியே இருக்கும்.

இறைச்சி:
கடல் உணவுகளான மீன், இறால் போன்றவையாக இருந்தாலும் அல்லது கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆக இருந்தாலும் நீங்கள் வாங்கி வந்து உடனே பயன்படுத்துவது தான் நல்லது. அதையும் மீறி நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதாக இருந்தால் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்த பின்பு அரை மணி நேரமாவது அதை குளிர்ந்த நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின்பு தான் பயன்படுத்த வேண்டும். இறைச்சியை பாதி வேக வைத்து பின்னர் பிரிட்ஜில் பதப்படுத்தி தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்துவதை ‘பார்ஷியல் குக்கிங்’ (partical cooking) என்று சொல்வார்கள். பாதி சமைக்கப்பட்ட இந்த உணவை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப எடுத்து சூடுபடுத்தி சமைத்துக் கொள்ளலாம். இதையும் ஒரு முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாது.

- Advertisement -