1 சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் அப்பளம், பூரி, வத்தல், சிப்ஸ் வகைகளை பொரிக்க முடியுமா? அதெப்படி?

appalam-without-oil

எண்ணெயில்லாமல் அப்பளம் சுட முடியுமா? என்று தானே எல்லோரும் முழித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆமாங்க ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் அப்பளம், வத்தல் போன்ற வகைகளை பிரமாதமாக பொரித்து எடுக்க முடியும். அப்படி என்றால் அதற்கு என்ன தேவை? இப்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த முறையில் நீங்கள் இது போன்ற பொருட்களை சமைப்பதால் உங்கள் பணம் மிச்சமாகும். எண்ணெய் என்பது உடலுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல. அதிலும் இப்போது வரும் எண்ணெய்கள் தரமானதாகவும் இல்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் நிலவுகிறது.

appalam3

நாம் கடைகளில் பாக்கெட்டுகளில் வாங்கும் எண்ணெயில் பல வகைகள் உண்மையில் உடலுக்கு கேடு விளைவிப்பவை. இதற்காக தான் மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி எண்ணெய் அரைக்கும் செக்கு எந்திரத்தில் கொடுத்து அரைத்து தருமாறு வாங்கி வரவேண்டும் என்கிறார்கள். உங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைக்க நீங்கள் மொத்த விலை மார்க்கெட்டுகளில் இருந்து மூல பொருட்களை வாங்கி வந்து செக்கில் ஆட்டி எண்ணெய் செய்து கொள்ளலாம். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தருபவையாக இருக்கும். நாமே மூலப்பொருள் வாங்கி தருவதால் நீங்கள் கடைகளில் வாங்குவதை விட விலை குறைவாக தான் இருக்கும். மேலும் நம் கண் முன்னே எடுத்து தருவதால் நம்பகரமானதாக இருக்கும்.

எண்ணெய் இல்லாமல் இந்த முறையில் உங்களால் அப்பளம், வத்தல், உப்பு கடலை, வேர்கடலை, வீல் சிப்ஸ், கலர் அப்பளம் என்று குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவு வகைகளை சுலபமாக செய்து விடலாம். எண்ணெயில்லாமல் பொரிப்பதால் இதன் சுவை சற்றே மாறுபட்டு தான் இருக்கும். ஆனாலும் இதன் சுவை நன்றாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

color-appalam

எண்ணெயில்லாமல் அப்பளம் பொரிக்க நமக்கு தேவைப்படுவது உப்பு. நம் சமையலறையில் இருக்கும் தூள் உப்பு இருந்தால் போதும். வேற எதுவும் தேவை இல்லை. ஒரு அடி கனமான வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தூள் உப்பை போட்டு நன்கு வறுக்கவும். உப்பு சூடு ஏறியதும் அப்பளத்தை போட்டு திருப்பி திருப்பி விடுங்கள். முதல் அப்பளம் உங்களுக்கு அவ்வளவாக சரியாக வராது. அடுத்தடுத்து அப்பளங்கள் நன்கு பொரிந்து விடும்.

- Advertisement -

அப்பளத்தை பொரிக்கும் பொழுது சரியாக பொரியாத பகுதிகளில் மேலே உப்பை தூவி விடுங்கள். அப்பளம் சூப்பராக பொரிந்து வரும். இந்த முறையில் நீங்கள் மற்ற வகைகளையும் போட்டு பொரித்து எடுத்தால் அருமையாக எண்ணெயில் பொரிப்பது போன்றே பொரிந்து வரும். இதே போல பூரி கூட சுட முடியும். பூரி மாவை இப்படி செய்து எடுத்து பின்னர் புல்கா போல் அடுப்பில் காட்டி எடுத்தால் எண்ணெய் இல்லாமல் பூரி ரெடி.

appalam-fry-in-salt

நாம் தள்ளுவண்டி கடைகளில் வேர்கடலை பொரித்து தருவதை பார்த்திருப்போம். அது எப்படி செய்கிறார்கள் என்று என்றாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் பெரிய வாணலியில் மணலைப் போட்டு மணல் சூடேறியதும் அந்த சூட்டிலேயே நமக்கு வேர்க்கடலையை பொரித்து தருவார்கள். பொரிக்கும் போதே அதன் வாசம் நம்மை சுண்டி இழுக்கும். அதே போல தான் இதுவும். மணல் உபயோகித்து நாம் செய்யலாம்.

peanut-fry-in-soil

ஆனால் மணல் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் தான் அதற்கு பதிலாக உப்பை பயன்படுத்துகிறோம். இப்படி செய்வதால் அப்பளத்தில் உப்புக் கரிக்காதா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நல்ல கேல்வி தான். சிறிதும் உப்பு கரிக்காது. அப்பளத்தில் என்ன உப்பு இருக்குமோ அதே அளவு தான் உப்பு இருக்கும். நீங்களும் செய்து பார்த்து பலனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல ரேஷன் அரிசி இருக்கா? ரேஷன் அரிசியில் சுலபமாக, வீட்டிலேயே பொரி செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.