அள்ள அள்ள குறையாத பொன்னும் பொருளும் எப்போதும் வீட்டில் நிறைந்து இருக்க வெள்ளிக்கிழமையில் கஜலஷ்மி தாயாருக்கு இந்த வழிபாட்டை செய்து வாருங்கள். இதை செய்தால் அஷ்டலஷ்மியும் உங்க வீட்டில் தான் குடியிருப்பார்கள்.

mahalakshmi cash jewl
- Advertisement -

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். நாம் எந்த குறையும் இன்றி வாழ்வதற்கு நமக்கு தேவைப்படுகின்ற அந்த 16 செல்வங்களும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும். மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்றால், சுக்கிர கிரகத்தின் அருள் கிடைக்க வேண்டும். அந்த சுக்கிரனின் அருளை பெற மிக எளிமையான பூஜை தான் கஜலட்சுமி பூஜை. இந்த கஜலட்சுமி பூஜையை முறையாக எப்படி வீட்டிலேயே செய்வது என்று இந்தப் ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

நாம் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு உதவும் கிரகம் சுக்கிரன். அவரின் அனுக்கிரக பார்வை நம் மீது இருந்தால் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும். அதாவது லட்சுமி கடாட்சம் ஏற்படும். சுக்கிரனுக்குரிய கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. இந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் அதாவது ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் நாம் கஜலட்சுமி பூஜையை மேற்கொள்ளும் பொழுது லட்சுமி தாயாரின் பரிபூரண அருளை பெறலாம்.

- Advertisement -

கஜலட்சுமி பூஜை செய்வது எப்படி?
வெள்ளிக்கிழமை காலையில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, கஜலட்சுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த புகைப்படத்தில் கஸ்தூரி மஞ்சள் மற்றும் குங்குமத்தை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அடுத்ததாக வாசனை மிகுந்த மலர்களை சூட்ட வேண்டும்.

நம் வசதிக்கு ஏற்ப 27, 51, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஏலக்காயை வைத்து நாம் கஜலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் ஸ்ரீம் மஹா லட்சுமியே நமஹ” என்று கூற வேண்டும். அடுத்ததாக கஜலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த நெய்வேத்தியத்திற்கு உலர் பருப்பு வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளுடன் தேனை கலந்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறகு தூப, தீப ஆராதனை செய்து பூஜையை முடிக்க வேண்டும். இப்பொழுது நாம் அர்ச்சனை செய்த ஏலக்காயை எடுத்து, அதனுடன் பச்சை கற்பூரத்தை கலந்து சிறிது கஸ்தூரி மஞ்சளையும், சிறிது குங்குமத்தையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை நாம் எந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடங்களில் எல்லாம் வைக்க வேண்டும்.

- Advertisement -

நெய்வேத்தியம் செய்த பொருட்களை உடன் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் வாரம் தோறும் செய்ய வேண்டும். இந்த வாரம் செய்த அந்த பொடியை அடுத்த வாரம் எடுத்துவிட்டு புதிதாக பொடி செய்து வைக்க வேண்டும். எடுத்த பழைய பொடியை பூந்தொட்டியில் போட்டு நீரை ஊற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனின் அருளால் 3 மாதத்தில் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து கையில் நிரந்தரமாக காசு தங்க 27 ஏலக்காய் போதும்.

இவ்வாறு நாம் வாராவாரம் செய்யும் பொழுது சுக்கிரன் நீச்சம் அடைந்திருந்தாலும், அவரின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து, சுக்கிரனின் அருளால் மகாலட்சுமியின் கடாட்சம் பெற்று, வீண் விரயங்கள் தவிர்த்து, செல்வம் அதிகரித்து, கடன் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, நம் வாழ்வில் பல மாற்றங்களை நாம் அடையலாம்.

- Advertisement -