புதிதாக செடி நட விரும்புபவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!

plant-honey
- Advertisement -

பொது இடங்களில் செடி நடுவது என்பதும் சமுதாய பணிகளில் ஒன்று தான். அதை அனைவராலும் செய்து விட முடியாது. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் செடி வளர்ப்பதற்கு யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்தும் சிலர் இடங்களை வீணாக்கிக் கொண்டு இருப்பார்கள். இதற்கு அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருப்பது கூட காரணமாக இருக்கும். புதிதாக செடி நட விரும்புபவர்கள் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

plant-uram

ஒவ்வொருவரும் வீட்டில் புதிதாக செடிகளை நடும் பொழுது சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். விதைகளை போட்டும் செடிகள் வளரவில்லையே! கிளைகளை நட்டு வைத்தோம் செடிகள் துளிர்க்க வில்லையே என்று வருந்தக் கூடாது. புதிதாக செடி நடுபவர்கள் மண்ணை முதலில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செடி நட பயன்படுத்த இருக்கும் மண் கலவை தளர்வாக இருக்க வேண்டும். உதிரி உதிரியான மண்ணை தொட்டியில் நிரப்பி அதனை அழுத்தி விடாமல் அப்படியே விதைகளைத் தூவி விட்டு மேலே மண்ணை கொட்ட வேண்டும். இறுக்கமான மண்ணில் ஆக்சிஜன் கிடைக்காமல் செடிகள் விரைவாக வளர்வதில்லை.

- Advertisement -

செடி வளர பயன்படுத்தும் கிளைகள் ஒடித்து வந்த உடனேயே நாம் நட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் நித்திய மல்லி செடி வளர்க்க வேண்டுமென்றால் நித்திய மல்லிச் செடியின் ஒரு கிளையை ஒடித்து வர வேண்டும். ஒடித்து வந்த சிறிது நேரத்திற்குள் அதனை நட்டு விட வேண்டும். அதனை அப்படியே காற்று படும்படி வைத்து விட்டால்! அதனுடைய வளரும் தன்மை இழந்துவிடும். முருங்கைச் செடி போன்ற காய்கறி செடிகளை இதுபோல் செய்யும் பொழுது கிளையின் அடிப்பகுதியில் லேசாக வெட்டிவிட்டு அதில் பசுஞ்சாணத்தை தடவ வேண்டும்.

cow dung

அதன் பின்னர் நீங்கள் நட்டு வைத்து மேல் நுனியிலும் இதே போல் வெட்டிவிட்டு பசும் சாணத்தை பூசிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது விருவிருவென கிளைகள் துளிர்விட ஆரம்பிக்கும். ரோஜா செடி, நித்திய மல்லி போன்ற பூக்களை தரும் செடிகளை நடும் பொழுது கிளைகளில் லேசாக வெட்டி விட்டு அதில் தேன் தடவ வேண்டும். இதற்கு சுத்தமான தேன் தான் பயன்படுத்த வேண்டும். தேனை தடவி நட்டு வைத்தால் வெகு விரைவாகவே செடிகள் பதிந்து புதிய கிளைகள் முளைக்க துவங்கிவிடும்.

- Advertisement -

இதே போல மற்றொரு முறையும் பயன்படுத்தலாம். எந்த வகையான செடியாக இருந்தாலும் கிளைகளை ஒடித்து வந்து நடும் பொழுது கிளைகளை கீழே லேசாகக் கத்தரித்து விட வேண்டும். இதனால் தோல் நீக்கி உள்ளிருக்கும் வெள்ளை பகுதியானது தெரியவரும். அதில் ஆலிவேரா அதாவது கற்றாழை எனப்படும் இச்செடியின் ஜெல் போன்ற பகுதியை பிரித்து எடுத்து ஏழு முறை அலச வேண்டும். கற்றாழையை ஏழுமுறை அலசுவதற்கு காரணம் அதில் இருக்கும் சில தேவையில்லாத கெட்ட கசப்புகளை வெளியேற்றுவதற்கு தான்.

katralai

கற்றாழை முகத்திற்கு பயன்படுத்துபவர்கள் கட்டாயம் இது போல ஏழு முறை அலச வேண்டும். அந்த ஜெல்லை குழைத்து புதிய கிளைகளில் தடவி அதன் பின் நீங்கள் நட்டு வைத்து வளர்க்கும் பொழுது விரைவாக செடிகள் முளைக்கத் துவங்கும். மண்ணின் தளர்வு மற்றும் வேருக்கு நாம் கொடுக்கும் ஊட்டச்சத்து தான் சில நாட்களிலேயே செடிகளை சுலபமாக துளிர்க்க விட செய்யும். இதனை அனைவரும் தெரிந்து கொண்டு பயனடையலாமே!

- Advertisement -