இனி மெதுவடை செஞ்சா இப்படித் தான் செய்யணும் சொல்ற மாதிரி, நல்ல மொறு மொறுன்னு கொஞ்சம் கூட எண்ணெய்யே குடிக்காம சூப்பரான வடை செய்யறது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

medu vada
- Advertisement -

வீட்டில் என்ன ஒரு விசேஷம் என்றாலும் இந்த வடை இல்லாமல் சமையல் இருக்காது. வடைகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் மெதுவடை, மசால் வடை இந்த இரண்டும் தான் மிகவும் பிரபலம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் மெதுவடையை ரொம்ப டேஸ்டா அதே சமயம் கொஞ்சம் கூட எண்ணெயே குடிக்காம மொறு மொறுன்னு இப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த வடை செய்ய முதலில் ஒரு கப் உளுந்தை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி முக்கால் மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வடைக்கு பருப்பு எப்போதும் அதிக நேரம் ஊறி விடக்கூடாது அப்படி ஊறினால் வடை எண்ணெய் அதிகம் குடித்து விடும்.

- Advertisement -

பருப்பு நன்றாக ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் இரண்டு சுற்று நன்றாக விட்டு விடுங்கள். அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து பத்து நிமிடம் வரை அரைத்தால் போதும். இந்த மாவை தண்ணீர் தொட்டு நாம் கைகளில் எடுத்து உருட்டினால் பந்து போல வர வேண்டும். அப்படி வந்தால் தான் வடை சுட மாவின் பதம் சரியாக இருக்கும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மாவை சேர்த்த பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு சிறிய துண்டு இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக வடை மொறு மொறு என்று வருவதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு, அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மாவை நன்றாக கைகளில் அடித்து பிசைய வேண்டும். இப்படி பிசையும் போது மாவின் உள்ளே காற்று சேர்ந்து வடை சுடும் போது மேலே மொறு மொறு என்று உள்ளே மெத்தென்றும் இருக்கும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றிக் கொள்ளுங்கள். வடை சுடுவதற்கு முன்பாக உங்கள் கைகளை தண்ணீரில் நனைத்த பிறகு மாவை எடுத்து பந்து போல உருட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் மெதுவாக போடுங்கள். இதே போல் ஒவ்வொரு வடை சுடும் போதும் கையை தண்ணீரில் தொட்டு பிறகு வடை சுட்டால் மாவு கைகளில் ஒட்டாமல் வருவதோடு அழகான வட்ட வடிவில் வரும்.

இதையும் படிக்கலாமே: பாசிப்பருப்பு சேமியா பாயாசம் செய்முறை: ( PasiParupu Semiya Javvarisi Payasam Recipe Tamil)

இந்த முறையில் நாம் மெதுவடை செய்தோம் என்றால் மேலே நல்ல மொறு மொறுவென்றும் உள்ளே பஞ்சு போலவும், அதே சமயம் கொஞ்சம் கூட எண்ணெயே குடிக்காமல் வடையை சுட்டு எடுத்து விடலாம். நீங்களும் ஒரு முறை இந்த முறையில ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -