கேஸ் பற்ற வைப்பதற்கு முன்பு கொஞ்சம் இந்த விஷயத்தையும் தெரிஞ்சுக்கோங்க. கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உண்டு. அதை கண்டுபிடிப்பது எப்படி?

stove-gas-cylinder
- Advertisement -

தினம் தினம் நம்முடைய வீட்டில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான பொருள்தான் கேஸ். கேஸ் சிலிண்டர் இல்லை என்றால் அன்றைய நாளுக்கான சாப்பாட்டை நம் வீட்டில் சமைக்கவே முடியாது. இவ்வளவு அத்தியாவாசியம் நிறைந்த ஒரு பொருளின் விலைவாசியை பற்றி நாம் சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு இருப்போம்.

இன்றைய தேதியில் ஒரு கேஸ் விலை என்ன என்று கேட்டால், இல்லத்தரசிகள் டக்குனு சொல்லிடுவாங்க. ஆனால் அந்த கேஸ் சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும். கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உண்டு. காலாவதியான கேஸ் சிலிண்டரை நாம் வாங்கக்கூடாது. கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு முன்பு அது காலாவதியான சிலிண்டரா, என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றிய பயனுள்ள தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
கேஸ் சிலிண்டருக்கு மேல் பக்கத்தில் மூன்று கம்பிகள் அமைந்திருக்கும். அந்த கம்பிகளுக்கு உள்பக்கத்தில் ஒரு ஆங்கில எழுத்தும், ஒரு நம்பரும்  இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கும் போதே உங்களுக்கு தெரியும். இந்த குறியீட்டு எண் தான் கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதி ஆகும். இதிலிருந்து காலாவதியாகும் தேதியை எப்படி கணக்கு செய்வது.

A B C D என்று கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆங்கில எழுத்துக்கள், மாதத்தை குறிப்பது. அந்த ஆங்கில எழுத்துக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு இலக்க எண், வருடத்தை குறிப்பது. உதாரணத்திற்கு B-13 என்று வைத்துக் கொள்வோம். இதில் மாதத்தையும் வருடத்தையும் எப்படி கண்டுபிடிப்பது.

- Advertisement -

B – 13ல், 13 என்பது 2013 ஆம் வருடத்தை குறிப்பது. A – ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B- ஏப்ரல், மே, ஜூன் மாதங்களையும், C – ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும், D – அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிப்பதாகும்.

B -13 என்று ஒரு கேஸ் எழுதி வைத்து இருந்தால் அந்த கேஸ், ஜூன் மாதம் 2013ஆம் தேதிக்குள் காலாவதி ஆவதாக அர்த்தம். 2013 வது வருஷம், ஜூன் மாதம் முடிந்த பிறகு இப்படி உங்கள் வீட்டுக்கு B-13 என்று தேதி போட்ட சிலிண்டர் வந்தால் அதை நீங்கள் வாங்கக்கூடாது என்று அர்த்தம். இனிமே கேஸ் சிலிண்டர் உங்க வீட்டுக்கு வந்தா இதையும் முதல்ல செக் பண்ணிக்கோங்க. ஒரு வேலை காலாவதியான கேஸ் சிலிண்டர் நம் வீட்டிற்கு வந்தால் அதை திருப்பி அனுப்பலாம். அதன் மூலம் எந்த தவறும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா இனி மீதமான சின்ன சோப்பு துண்டை கூட வேண்டாம் என்று தூக்கி போடவே மாட்டீங்க. மீதமான சோப்பை வச்சு செலவே இல்லாமல் சூப்பரா கேண்டில் தயாரிக்கலாம் வாங்க.

ஒரு சமையல் சிலிண்டருக்கு 15 வருடங்கள் ஆயுட்காலம். இருந்தாலும் கட்டாயமாக அந்த சிலிண்டரை ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அப்படி பரிசோதனை செய்யும் போது தான் இப்படிப்பட்ட காலாவதி தேதிகளை அந்த சிலிண்டரில் போடுவார்கள். இப்படிப்பட்ட காலாவதியான சிலிண்டர்கள் ஒருவேளை தவறி நம் வீட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். நம்முடைய குடும்ப பாதுகாப்பை, நாம் தானே பார்க்க வேண்டும். அனைவரின் நலனுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள குறிப்பு இது. இதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லிக் கொடுங்கள்.

- Advertisement -